II


442திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     படிமை - தவக்கோலம்; தவகொழுக்கமுமாம். ஆல் : அசை, கடுமை - விரைவு. கலத்தின் வந்தவள் கடுமையாக வந்தாள் என்க. (29)

கற்பின் மிக்கெழு* கற்புங் கருத்தினிற்
சிற்ப ரஞ்சுடர் சேவடி மேல்வைத்த
அற்பு மிக்கெழ மெலலவந் தாளரோ
பொற்பின் +மிக்குள பத்திரன் பொன்னனாள்.

     (இ - ள்.) பொற்பின் மிக்குள பத்திரன் பொன்அனாள் - அழகினார்
மேம்பட்ட பாணபத்திரன் மனைவியாகிய திருமகளை ஒத்த பாடினி,
கற்பின்மிக்கு எழுகற்பும் - கல்வியறிவால் மேம்பட்டெழுந்த நிறையும்,
கருத்தினில் - தனது உள்ளத்தில், சிற்பரஞ்சுடர் சேவடிமேல் வைத்த அற்பும்
- ஞானப் பரஞ்சோதியாகிய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிமேல்
வைத்த அன்பும், மக்கு எழ - பொலிந்து தோன்ற, மெல்ல வந்தாள் -
மெதுவாக வந்தனள்.

     கற்பிற்குரிய அமைதியோடு வந்தாளென்பார் ‘மெல்லவந்தாள்’ என்றார்.
அரோ : அசை. (30)

அலங்கு மாரமோ டங்கத மாதிபல்
கலன்க டாங்கிக் கலைஞர் குழாத்திடை
இலங்கு மாட மதுரைக் கிறைவரும்
புலன்கொ ணாவலர் போல்வந்து வைகினார்.

     (இ - ள்.) இலங்கு மாட மதுரைக்கு இறைவரும் - விளங்கா நின்ற
மாடங்களையுடைய மதுரைக்கு இறைவராகிய சோமசுந்தரக் கடவுளும்,
புலன்கொள் நாவலர் போல் - (இசை நூலில்) உணர்வு மிக்க புலவர்போல,
அலங்கும் ஆரமோடு - அசைகின்ற முத்துமாலையோடு, அங்கதம் ஆதிபல்
கலன்கள் தாங்கி - தோளணி முதலிய பல அணிகளைத் தரித்து, கலைஞர்
குழாத்திடை வந்து வைகினார் - புலவர் குழுவின் நடுவில் வந்து தங்கினர்.

     அலங்குதல் - அசைதல்; ஒளிவிடுதலுமாம். நாவலர்போல் - நாவலருள்
ஒருவர்போல். (31)

வத்தவை தன்னி லருங்கலம்
வந்த வேய்த்தடந் தோளிசை மாதராள்
முந்த வேத்திசை பாடினள் முந்தையோர்
சிந்தை வேட்டொன்றுஞ் செப்பின ரில்லையால்.

   (பா - ம்.) * கற்பு மிக்கெழு. +பொற்புமிக்குள.