(இ
- ள்.) அந்த வேந்து அவைதன்னில் - அந்த அரசவையின் கண்,
அருங்கலம் வந்த - அரிய மரக்கலத்தில் வந்த, வேய்த்தடம் தோள்
இசைமாதராள் - மூங்கில் போலும் பருத்ததோளையுடைய பாடினி, முந்த -
முற்பட, வேத்திசை பாடினன் - அரசர்க்குரிய இசையைப் பாடினள்;
முந்தையோர் - முன் கொண்டாடினவர், சிந்தை வேட்டு - மனம் விரும்பி,
ஒன்றும் செப்பினர் இல்லை - யாதும் கூறா திருந்தனர்.
வேந்து
வேத்து என்றாயது. ஏத்திசை எனப்பிரித்து, நால்வகை வருணப்
பூதரை வாழ்த்தினள் என்று கூறி,
"அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக
வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க
வணிக ரிருநெறி நீணிதி தழைக்க
பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக
அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக
வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச்சொலென்
றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச்
சேட்பட வமைத்துச் செழும்புகை காட்டிச்
சேவடி தேவரை யேத்திப் பூதரை
மூவடி முக்கால் வெண்ணபா மொழந்து
செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக்
கவியொழுக் கத்து நின்றுழி வேந்தன்
கொடுப்பன கொடுக்க வமையு மென்ப" |
என்னும் சூத்திரத்தைக்
காட்டுவாருமுளர். வேத்திசை என்பதில் அஃது
அடங்குதலுங் காண்க. ஆல் : அசை. (32)
வீணை தோளிட னேந்திய வெண்மலர்
வாணி பாட விருக்கையின் வைகியே
யாண ரம்பெறிந் தின்னிசை யோர்ந்தெழீஇப்
பாணர் கோமகன் பன்னியும் பாடுமால். |
(இ
- ள்.) வீணை தோள் இடன் ஏந்திய வெண்மலர்வாணி -
யாழினை இடத்தோளிலேந்திய வெண்டாமரைமலரில் வீற்றிருக்கும் கலைமகள்,
பாடு அ இருக்கையின் வைகி - பாடும் அவ்வாசனத்திலே தானும் இருந்து,
யாழ் நரம்பு எறிந்து - யாழின் நரம்பினை விரலினாற் றாக்கி, இன் இசை
ஓர்ந்து எழீஇ - இனிய இசையினை ஆராய்ந்து எழுப்பி, பாணர் கோமகன்
பன்னியும் பாடும் - பாணர் பெருமானாகிய பத்திரன் மனைவியும்
பாடுவாளாயினள்.
பாடு
அவ்விருக்கை எனப் பிரிக்க. வாணி பாடும் இருக்கையாவது
ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தியாகிய பதுமாசனமாகும். ஒன்பான்
விருத்தியாவன : புதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை சம்புடம், அயமுகம், சுவத்திகம்,
தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. யாழ் நரம்பு என்பது
மருவிற்று. எழீஇ, சொல்லிசையளபெடை, ஆல் : அசை. (33)
|