II


446திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என்பது முதலிய சிவஞான சித்தியார்த் திருவிருத்தங்கள் எழுந்தன. இம்
மூன்றும் பத்திரன் மனைவியாகிய பாடினி பாடிய இசைப் பாட்டுக்களாக
ஆசிரியர் பாடியன; இவை கந்தருவ மார்க்கத்தான் இடை
மடக்கிவந்தன. (36)

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
கண்ணுதன் மதுரைப் பிரானையிவ் வாறு
     கருதிய பாணியாற் கனிந்து
பண்ணுதல் பரிவட் டணைமுத லிசைநூல்
     பகர்முதற் றொழிலிரு நான்கும்
எண்ணுறு வார்தல் வடித்திடன் முதலா
     மெட்டிசைக் கரணமும் பயப்ப
மண்ணவர் செவிக்கோ வானவர் செவிக்கும்
     வாக்கினா ணாவிளை யமுதம்.

     (இ - ள்.) கண் நுதல் மதுரைப்பிரானை - நெற்றியிற் கண்ணையுடைய
மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை, இவ்வாறு கருதிய பாணியால்
- இங்ஙனம் கருதிய இசைப்பாட்டினால், கனிந்து - மனங் கனிந்து,
பண்ணுதல் பரிவட்டணை முதல் - பண்ணுதல் பரிவட்டணை ஆதியாக,
இசைநூல் பகர்முதல் தொழில் இருநான்கும் - இசை நூல் கூறுகின்ற
முதற்றொழில் எட்டும், எண்ணுறு வார்தல் வடித்திடல் முதலாம் -
எண்பொருந்திய வார்தல் வடித்திடல் முதலாகிய எட்டு இசைக்கரணமும்
பயப்ப - எட்டு இசைக்கரணங்களும் பொருந்த, நாவினை அமுதும் - தனது
நாவால் உண்டாக்கிய அமுதத்தை, மண்ணவர் செவிக்கோ - நிலவுலகோர்
செவிகட்கு மட்டுமோ, வானவர் செவிக்கும் வாக்கினாள் - தேவர்கள்
செவிக்கும் வார்த்தாள்.

     மதுரைப்பிரானை இவ்வாறு கருதி பாணி என்றமையால் இது
பெருந்தேவபாணி என்க. முதற்றொழில் எட்டாவன - பண்ணல்,
பரிவட்டண, ஆராய்தல், தைவரல், செலவு, கையூழ், விளையாட்டு, குறும்
போக்கு என்பன. அவற்றுள் பண்ணலாவது இணை, கிளை, பகை, நட்பான
நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல். பரிவட்டணை -
வீக்கின நரம்பை விரல்களால் அகமும் புறமும் கரணஞ் செய்து
தடவிப்பார்த்தல், ஆராய்தல் - ஆரோகண அவரோகண வகையால்
இசையைத் தெரிதல். தைவரல் - அநுசுருதியேற்றல். செலவு - ஆளத்தியிலே
நிரம்பப்பாடுதல், கையூழ் - பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுத்தல்.
விளையாட்டு - வண்ணத்திற் செய்த பாடல்களை இன்பமாகப் பாடுதல். குறும்
போக்கு - குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இசைக்கரணம்
எட்டாவன - வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டர்,
எள்ளல், பட்டடை என்பன. (37)

இடையினோ டேனைப் பிங்கலை யியக்க
     மிகந்துமூ லந்தொடுத் தியக்கி
நடுவுறு தொழிலாற் பிரமரந் திராந்த
     நடைபெற விசைக்கு முள்ளாளம்.