மிடறுவீங் காள்கண் ணிமைத்திடா ளெயிறு
வெளிப்படாள் புருவமே னிமிராள்
கொடிறது துடியாள் பாடலு மதுகேட்
டனைவருங் குதூகல மடைந்தார். |
(இ
- ள்.) இடையினோடு - இடைகலையோடு, ஏனைப் பிங்கலை
இயக்கம் இகந்து - மற்றைப் பிங்கலையிலும் இயங்கும் இயக்கம் ஒழிந்து,
மூலம் தொடுத்து இயக்கி - மூலாதாரத்தினின்றுங் காற்றினை எழுப்பி, நடுவுறு
தொழிலால் - சுழுமுனையின் தொழிலினால், பிரமரந்திர அந்தம் நடைபெற
இசைக்கும் உள்ளாளம் - பிரமரந்திரம் முடிய நடக்குமாறு இசைக்கின்ற
உள்ளாளகீதத்தினை, மிடறு வீங்காள் - மிடறு வீங்காமலும், கண்
இமைத்திடாள் - கண்மூடாமலும், எயிறு வெளிப்படாள் - பற்கள்
வெளிப்படாமலும், புருவம் மேல் நிமிரான் - புருவங்கள் மேல் ஏறாமலும்,
கொடிறது துடியாள் - கபோலந் துடியாமலும், பாடலும் - பாடியவளவில்
அதுகேட்டு அனைவரும் குதூகலம் அடைந்தார் - அதனைக்கேட்டு
அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
நடுவுறு
தொழில் - சுழுமுனாமார்க்கத்தில் வாயுவை இயக்கிச் செய்யும்
கிரியை. உள்ளாளம், இச்செய்யுளிற் கூறிய இலக்கணத்தோடு
கந்தருவராற்பாடப்படுவது.
"கண்ணிமையா
கண்டந் துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர்
உள்ளாளப் பாட லுணர்" |
என்பது காண்க. கொடிறது,
அது : பகுதிப் பொருள் விகுதி. (38)
கன்னிநா டுடையான் கைதவ னெனும்பேர்க்
காரணந் தேற்றுவா னெனத்தான்
இன்னிசை யறிஞ னாகியு முன்போ
லியம்புவா னொருப்படு கின்றான்
முன்னவ னருளாற் றன்மனக் கோட்டை
முரண்கெடப் பொதுமையா னோக்கி
இன்னவ டானே வென்றன ளென்றா
னினையவா றனைவரு மொழிந்தார். |
(இ
- ள்.) கன்னிநாடு உடையான் - கன்னி நாட்டினையுடைய
பாண்டியன், கைதவன் எனும் போக்காரணம் தேற்றுவான் போல -
கைதவன் என்னும் தனது பெயரின் காரணத்தை அறிவிப்பவனைப் பேல,
தான் இன் இசை அறிஞன் ஆகியும் - தான் இனிய இசை நூல
அறிஞனாயிருந்தும், முன்போல் இயம்புவான் ஒருப்படுகின்றான் -
முன்போலவே கூறுதற்கு மனந்துணிகின்றவன், முன்னவன் அருளால் -
சோமசுந்தரக் கடவுளின்
|