II


448திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



திருவருளால், தன் மனக் கோட்ட முரண் கெட - தனது மனக்கோணலின்
வலிகெட, பொதுமையால் நோக்கி - நடுநிலையோடு பார்த்து, இன்னவன்
தானே வென்றனள் என்றான் - இந்தப் பாடினியே வென்றனள் என்று
கூறினான்; இனையவாறு அனைவரும் மொழிந்தார் - இங்ஙனமே எல்லாருங்
கூறினர்.

     பாண்டிவேந்தரைக் குறிக்கும் கைதவன் என்னும் பெயர்க்கு
வஞ்சகன் என்றும் பொருளுண்டாகலின் அப் பொருள்பற்றியே
அப்பெயர் உண்டாயிற்றென்று தெளிவிப்பான்போல நடுநிலை திறம்பிக்
கூற ஒருப்படுகின்றவன் என்றார். (39)

கரியுரை மொழந்த கைதவ னிலங்கைக்
     கைதவப் பாடினி கழுத்திற்
புரிசூழன் மாதை யிருத்தென விருத்தும்
     போதுமை யிடங்கரந் திருந்த
அரியநா வலரீ தற்புத மீதற்
     புதமென வறைந்தவை காண
விரிகதிர் மின்போன் மறைந்தனர் யாரும்
     வியந்தனர் பயந்தனன் வேந்தன்.

     (இ - ள்.) கரி உரைமொழிந்த கைதவன் - சான்று மொழி பகர்ந்த
பாண்டியன், கைதவ இலங்கைப் பாடினி கழுத்தில் - வஞ்சக ஒழுக்க
முடைய ஈழப் பாடினி கழுத்தில், புரிகுழல் மாதை இருத்து என -
கட்டடைந்த கூந்தலையுடைய பாடினியை இருத்துக என்று ஏவ, இரத்தும்
போது - (ஏவல் மகளிர் அங்ஙனமே) இருத்துங்காலையில், உமை இடம்
கரந்து இருந்த - உமாதேவியார் பொருந்திய இடப்பாகத்தை மறைத்து
வந்திருந்த, அரிய நாவலர் - அரிய புலவராகிய சோமசுந்தரக் கடவுள்,
ஈது அற்புதம் ஈது அற்புதம் என அறைந்து - இது வியப்பு இது வியப்பு
என்று கூறியருளி, அவைகாண - அவையிலுள்ளோர் அனைவருங் காண,
விரிகதிர் மின்போல் மறைந்தனர் - விரிந்த ஒளியினையுடைய மின்னலைப்
போலமறைந்தனர்; யாரும் வியந்தனர் - யாவரும் வியப்புற்றனர்; வேந்தன்
பயந்தனன் - அரசன் அச்சமெய்தினான். அடுக்கு உவகையின்கண் வந்தது.
(40)

செங்கணே றழக ராடலீ தென்றே
     யாவருந் தெளிந்தன ரேத்தி
அங்கணா யகர்தங் கருணையின் றிறனு
     மடியவ ரன்பையுந் தூக்கித்
தங்கணா ரருவி பெருகவா னந்தத்
     தனிப்பெருஞ் சலதியி லாழ்ந்தார்
வங்கமேல் வந்தாள் பிடர்மிசை யிருந்த
     மாணிழை விறலியை மன்னன்.