II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்453



     ஒரு வேளாளன் உளன் என வருவித்து முடிக்க. செல்வச் செருக்கால்
என்க. கடியாராகி - குற்றங் கண்டுழி ஒறுத்து நல்வழிப் படுத்தாராகி. (4)

தந்தையுந் தாயு மாயத் தறுகண்மிக் குடைய ராகி
மைந்தரும் வேட ரோடு கூடிவெங் கானில் வந்து
வெந்தொழில் வேட்டஞ் செய்வார் வெயில்புகாப் புதற்கீ ழெய்தி
ஐந்தவித் திருந்து நோற்குங் குரவனை யங்குக் கண்டார்.

     (இ - ள்.) தந்தையும் தாயும் மாய - தம் அப்பனும் அன்னையும்
இறந்தொழிய, மைந்தரும் - புதல்வர்களும், தறுகண்மிக்கு உடையராகி -
வன்கண்மை மிகவும் உடையராய், வேடரோடு கூடி வெங்கானில் வந்து -
வேடர்களோடு கூடிக்கொடிய காட்டில் வந்து, வெந்தொழில் வேட்டம்
செய்வார் - கொடுந் தொழிலாகிய வேட்டையாடுவோர், வெயில் புகாப் புதல்
கீழ்எய்தி - வெய்யில்புகாத புதலின் கீழ்ச்சென்று, ஐந்து அவித்து இருந்து
நோற்கும் - ஐம்புலன்களையும் வென்று தியானத்திலிருந்து நோற்கின்ற,
குரவனை அங்கு கண்டார் - வியாழபகவானை அங்கே கண்டனர்.

     ஐந்து, ஐம்புலனுக்கு ஆகுபெயர். எய்தி இருந்து நோற்கும் குரவனை
வேட்டஞ் செய்வார் அங்குக் கண்டார் என்க. (5)

கைத்தலம் புடைத்து நக்குக் கல்லும்வெம் பரலும் வாரி
மெய்த்தவன் மெய்யிற் றாக்க வீசினார் வினையை வெல்லும்
உத்தமன் வீக்கஞ் செய்தார் தவத்தினுக் குவரென் றுன்னிச்
சித்தநொந் தினைய வஞ்சத் தீயரைச் செயிர்த்து நோக்க.

     (இ - ள்.) கைத்தலம் புடைத்து நக்கு - இரண்டு கைகளையும்
ஒன்றோடொன்று தாக்கி நகைத்து, கல்லும் வெம்பரலும் வாரி - கற்களையும்
கொடிய பருக்கைகளையும் அள்ளி, மெய்த்தவன் மெய்யில் தாக்க -
உண்மைத் தவத்தினையுடைய வியாழனது உடம்பிலே தாக்குமாறு, வீசினார் -
எறிந்தார்கள்; இனையவஞ்சத் தீயரை - இந்த வஞ்சக் கொடி யோரை,
வினையை வெல்லும் உத்தமன் - வினையைப் புறங்காணும் அவ்வுத்தமன்,
உவர்தவத்தினுக்கு வீக்கம் செய்தார் என்று உன்னி - இவர் நமது தவத்திற்கு
இடையூறு செய்தனரே என நினைந்து, சித்தம் நொந்து - மனம் நொந்து,
செயிர்த்து நோக்கா - சினந்துநோக்கி.

     வீக்கம் - அழிவு; வீ என்பதன் அடியாகப் பிறந்தது; விக்கம் எனப்
பாடங் கொண்டு விக்நம் என்பதன் சிதைவு என்பாருமுளர். உவர் - இவர்.(6)

தொழுந்தொழின் மறந்து வேடத் தொழிலுவந் துழல்வீர் நீர்மண்
உழுந்தொழி லுடைய நீராற் பன்றியி னுதரத் தெய்திக்
கொழுந்தழ லனையவேனக் குருளையாய்த் தந்தை தாயை
இழந்தல முறுமி னென்னா விட்டனன் கடிய சாபம்.

     (பா - ம்.) விக்கம்.