II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்455



உமையை ஒரு பாகத்திலுடைய அவ்விறைவனைப் பேணி வழிபடும் குரவன்
கூறினான்; பன்னிரு தனயர் தாமும் - (பின்) பன்னிரு மைந்தர்களும்.

தொன்மைசால் குருவி ருந்த துறையதன் புறத்த வான
பன்மைசால் கான வாழ்க்கைப் பன்றிகட் கரசாய் வைகுந்
தன்மைசா றனியே னத்தின் றன்பெடை வயிற்றிற் சென்று
வன்மைசால் குருளை யாகிப் பிறந்தனர் வழக்கான் மன்னோ.

     (இ - ள்.) தொன்மைசால் குருவிருந்த துறையதன புறத்தஆன -
பழமை மிக்க குருவிருந்த துறையின் புறத்தில் உள்ளனவாகிய, பன்மைசால்
கான வாழ்க்கைப் பன்றிகட்கு - பலவாகிய காட்டில் வாழுதலையுடைய
பன்றிகளுக்கு, அரசாய் வைகம் தன்மைசால் - வேந்தாயிருக்கும்
தன்மையுடைய, தனி ஏனத்தின் - ஒப்பற்ற பன்றியின், பெடை வயிற்றில்
சென்று. பெண்ணின் வயிற்றிற் சென்று, வழக்கால் - சாப நெறியாலே,
வன்மைசால் குருளையாகிப் பிறந்தனர் - வலிமை மிக்க குட்டிகளாய்ப்
பிறந்தனர்.

     ஏனத்தின் பெடை என்பதனை இலேசாற் கொள்க. துறையது, அது
பகுதிப் பொருள்விகுதி. தன் சாரியை. மன், ஓ : அசைகள். (10)

ஆனநா ளொருநா ளெல்லை யரசருக் கரசனான
மீனவன் மதுரை நீங்கி மேற்றிசைக் கான நோக்கி
மானமா வேட்டஞ் செய்வான் மத்தமா வுகைத்துத் தண்டாச்
சேனை* தன் புறம்பே மொய்ப்பச் செல்கின்றான் செல்லுமெல்லை.

     (இ - ள்.) ஆனநாள் - இவ்வாறான காலையில், ஒருநாள் எல்லை -
ஒருநாளளவில், அரசருக்கு அரசனான மீனவன் - மன்னர்களுக்கு
மன்னனாகிய இராச ராசபாண்டியன், மதுரைநீங்கி - மதுரையைவிட்டு,
மேல்திசைக் கானம் நோக்கி - மேற்குத் திக்கிலுள்ள காட்டினை நோக்கி,
மானம்மா வேட்டம் செய்வான் - பெரிய விலங்குகளை வேட்டையாடுதற்
பொருட்டு, மத்தமா உகைத்து - மதமயக்கத்தையுடைய யானையைச்
செலுத்தி, தண்டாச் சேனை தன்புறம்பே மொய்ப்பச் செல்கின்றான் -
நீங்காத தானைகள் தன்மருங்கிற் சூழப்போகின்றான்; செல்லும் எல்லை -
அங்ஙனம் போகும்போது.

     இராச ராச பாண்டியன் என்பார் ‘அரசருக் கரசனான மீனவன்’
என்றார் எனலுமாம். மானம் - பெருமை. (11)

மாவழங் கிடங்க டேர வல்லதோல் வன்கா லொற்றா
பாவடிச் சுவடு பற்றிப் படர்ந்துநா றழல்பு லால்வாய்த்
தீவிழி யுழுவை யேனந் திரிமருப் பிரலை புல்வாய்
மேவிட னறிந்து வல்லே விரைந்துவந் தெதிரே சொன்னார்.

     (பா - ம்.) * தண்டார்ச்சேனை.