(இ
- ள்.) மா வழங்கு இடங்கள் தேரவல்ல - விலங்குகள் பயிலும் இடங்களை
ஆராய்ந்து அறியவல்ல, தோல்வன்கால் ஒற்றர் - தொடு,
தோலணிந்த வலிய காலையுடைய ஒற்றர்கள். பா அடிச் சுவடுபற்றிப் படர்ந்து
- (விலங்குகளின்) பரந்த அடிச்சுவட்டினைப் பின்பற்றிச் சென்று, நாறு
அழல்புலால் வாய்த்தீவிழி உழுவை - தோன்றும் சினத்தீயினையும் புலால்
நாறும் வாயினையும் நெருப்புப்போன்ற கண்களையுமுடைய புலிகளும், ஏனம்
- பன்றிகளும், திரிமருப்பு இரலை - திருகிய கொம்புகளையுடைய
கலைமானும், புல்வாய் - மானினங்களும் மேவு இடன் அறிந்து - தங்கிய
இடங்களை அறிந்து, வல்லே விரைந்து வந்து எதிரே சொன்னார் - மிக
விரைந்து வந்து மன்னனெதிரே நின்று புகன்றனர். (12)
மறத்துறை
வேட்ட மாக்கள் வல்லைபோ யொடியெ றிந்து புறத்துவார் வலைகள் போக்கி நாயதன்
புறம்பு போர்ப்ப நிறைத்துமா வொதுக்கி நீட்டும் படைஞராய்ச் *சூழ்ந்து நிற்ப
அறத்துறை மாறாக் கோலா னானைமேல் கொண்டு நிற்ப. |
(இ
- ள்.) மறத்துறை வேட்ட மாக்கள் - கொலை நெறிபயின்ற
வேட்டை யாடுதல் வல்லார், வல்லைபோய் - விரைந்துசென்று, ஒடியெறிந்து
- காடுகளை வெட்டிச் சரித்து, புறத்துவார் வலைகள்போக்கி - புறம்போ
நெடிய வலைகளைக் கட்டி, நாய் அதன் புறம்பு போர்ப்ப நிறைத்து -
நாய்கள் அவ்வலையில் புறம்பு சூழ்ந்து நிற்குமாறு அவற்றை நிறைத்து, மா
ஒதுக்கி நீட்டும் படைஞராய்ச் சூழ்ந்துநிற்ப - விலங்குகளை ஒரு வழிப்படுத்தி
அவற்றின்மேல் விடும் படைகளையுடையராய்ச் சுற்றிலும் நிற்கவும்,
அறத்துறைமாறாக் கோலான் - அறநெறியினின்றும் மாறாத செங்கோலை
யுடைய பாண்டியன், ஆனைமேல் கொண்டுநிற்க - யானைமேலேறி ஒருபால்
நிற்கவும்.
ஒடியெறிதல்
- காடுவெட்டிச் சரித்தல். (13)
சில்லரித்
துடி+கோ டெங்குஞ் செவிடுறச் சிலையா நிற்பப் பல்வகைப் பார்வை காட்டிப் பயில்விளி
யிசையா நிற்ப+
வல்லிய மிரலை மையன் மானினன் வெருளா நிற்ப வில்லிற வலித்து வாங்கி மீளிவெங்
கணைக டூர்த்தார். |
(இ
- ள்.) சில் அரித்துடி - சில்லென அரித்தெழும் ஓசையை யுடைய
உடுக்கைகளும், கோடு - கொம்புகளும், எங்கும் செவிடுறச் சிலையாநிற்ப -
எவ்விடத்தும் செவிடுபடுமாறு ஒலியா நிற்கவும், பல்வகைப் பார்வைகாட்டி -
பலவகையான பார்வை விலங்குகளைக் காட்டி, பயில்விளி இசையாநிற்ப -
அவ்விலங்குகள் பயின்ற அழைப்பொலியை ஒலியா நிற்கவும், வல்லியம்
இரலை மையல் மான் இனம் வெருளா நிற்ப - புலிகளும் மான்களும்
மதமயக்கத்தை யுடைய யானைக் கூட்டங்களும் அஞ்சுமாறு, வில் இற
வலித்து வாங்கி - வில் முறியுமாறு வலிபெற வளைத்து, மீளிவெங் கணைகள்
தூர்த்தார் - வலிய கொடிய கணைகளைப் பொழிந்தனர்.
(பா
- ம்.) * ஈட்டும் படைஞராய். +சில்லரிதுடி. +இசையாநிற்பர்.
|