உடலையுடைய உயிர்களின்
கொழுவிய ஊனையும், கறிப்பொடி ஊறும்
எண்ணெய் - மிளகுபொடி ஊறிய எள்ளின் நெய்யையும், இடம்பட வாய்
அங்காந்த எரிக்குழி புதையப்பெய்து - இடம் பொருந்த வாய் திறந்த
தீயினையுடைய வேள்விக் குண்டம் மறையுமாறு சொரிந்து, கொல்லாத விரதம்
பூண்டார் கொடும்பழி வேள்வி செய்தார் - கொல்லாமையாகிய விரதத்தை
மேற்கொண்ட சமணர்கள் கொடிய பழியினை விளைக்கும் வேள்வியினைச்
செய்தார்கள்.
விடம்பொதி
காட்டம் - எட்டி முதலியவற்றின் விறகு. நஞ்சினுடம்புடை
உயிர் - பாம்பு முதலியன. கோமூன் கொழுப்பு. வாய் அங்காந்த - வாய்
திறந்தாற்போன்ற. கொல்லாமையாகிய விரதம் என விரிக்க. இவரது
கொல்லாத விரதம் இருந்தவா றென்னேயென் றிகழுவார் கொடும்பழி
வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார் என்றார். (12)
மாடுள பொதும்பர் நந்தா வனமுள சோலை யுள்ள
காடுள கருகிச் சாயக் கயலுள வோடை யுள்ள
கோடுள வாவி யுள்ள குளமுள வறப்பத் தாவிச்
சேடுள முகிலுந் தீயச் சிகையெழு குண்டத் தீவாய். |
(இ
- ள்.) மாடு உள பொதும்பர் நந்தாவனம் உள - பக்கத்திலுள்ள
மரச் செறிவினையுடைய நந்தவனங்களானவும், சோலை உள்ள -
சோலைகளானவும், காடுஉள - காடுகளானவும், கருகிச்சாய - கருகித் தீயவும்,
கயல் உள ஓடை உள்ள - கயல்கள் உள்ள ஓடைகளானவும், கோடு உள
வாவி உள்ள - கரையுள்ள வாவிகளானவும், குளம் உள - குளங்களானவும்,
வறப்ப - வறளவும், சேடு உள முகிலும் தீய - சேய்மையில் உள்ள முகிலுங்
கருகவும், தாவி எழுசிகை குண்டத் தீவாய் - தாவி எழுகின்ற
சிகையினையுடைய வேள்விக் குண்டத் தீயின்கண்.
மாடுள,
கயலுள, கோடுள சேடுள என்பவற்றிலுள்ள உள என்பன
குறிப்புப் பெயரெச்சம். ஏனைய உள, உள்ள என்பன முதல் வேற்றுமைச்
சொல்; நந்நவனம் முதலியவற்றிலுள்ள உயிர்களென்று உரைப்பாருமுளர்;
நந்தவனம் முதலியன அழிதல் கூறவே அவற்றிலுள்ள உயிர்களின் அழிவும்
பெறப்படுதலானும், கருகிச்சாய, வறப்ப என்பவற்றிற்கு அங்ஙனம் பொருள்
கூறுதல் சிறப்பின்றாகலானும் யாம் கூறிய பொருளே பொருத்தமாதல் காண்க.
கொல்லா விரதம் பூண்டவர் இவையெல்லாம் அழிவுறும்படியாகத் தீ
வளர்த்தனர் என இகழ்ந்துரைத்தவாறு. (13)
கூற்றெழு தோற்றம் போல வஞ்சனக் குன்றம் போலக்
காற்றெழு செவியு நால்வாய் கௌவிய மருப்பு மாறா
ஊற்றெகு மதமு மூச லாடிய வொற்றைக் கையும்
ஏற்றெழு விடம்போற் சீறி யெழுந்ததோர் தறுகண் யானை. |
(இ
- ள்.) காற்று எழு செவியும் - காற்றினை எழுப்புகின்ற
காதினையும்,நால்வாய் கௌவிய மருப்பும் - தொங்குகின்ற வாயினைப்
பற்றிய கொம்பினையும், ஆறா ஊற்று எழு மதமும் - ஆறாகச் சுரந்து
|