மள்ள ரோசை துடியி னோசை வயிரி னோசை வாளிபோய்த்
தள்ள வீழ்வி லங்கி னோசை தப்பி யோடு மானின்மேற்
றுள்ளு நாய்கு ரைக்கு மோசை கானமூடு தொக்குவான்
உள்ளு லாயு டன்றொ லிக்கு முருமி னோசை புரையமால். |
(இ
- ள்.) மள்ள ஓசை - வீரர்களின் ஆர்ப்பொலியும், துடியின் ஓசை
- உடுக்கையின் ஒலியும், வயிரின் ஓசை - ஊதுகொம்பின் ஒலியும்,
வாளிபோய்த் தள்ள வீழ் விலங்கின் ஓசை - வாளிகள் சென்று தைத்த
வீழ்த்தலால் வீழ்கின்ற விலங்குகளின் ஒலியும், தப்பி ஓடும் மானின்மேல் -
வலையைத் தப்பியோடும் மான்களின்மேல், துள்ளும் நாய் குரைக்கும் ஓசை
- தாவுகின்ற நாய்கள் குரைக்கின்ற ஒலியும், கானம் ஊடு தொக்கு - காட்டின்கண் ஒருசேரத்
திரண்டு, வானுள் உலாவி உடன்று ஒலிக்கும்
உருமின் ஓசை புரையும் - வானின்கண் உலாவி வெகுண்டு ஒலிக்கும்
இடியோசையினை ஒக்கும்.
எண்ணும்மைகள்
விரிக்க. ஆல் : அசை. (21)
இன்ன வேறு பல்வி லங்கெ லாம லைத்தி லங்குவேல்
மன்ன ரேறு தென்னர் கோம கன்கு டக்கி னேகுவான்
அன்ன போதொ ரேன மேன வரசி ருக்கு மடவிவாய்
முன்ன ரோடி வந்து நின்று வந்த செய்தி மொழியுமால். |
(இ
- ள்.) இன்ன பல்வேறு விலங்கு எலாம் அலைத்து - இங்ஙனம்
பல்வேறு வகையான விலங்குகளை யெல்லாம் வருத்தி, மன்னர் ஏறு -
அரசருள் ஏறுபோன்ற, இலங்கு வேல் தென்னர் கோமகன் - விளங்குகின்ற
வேற்படை யேந்திய பாண்டியர் கோமான், குடக்கின் ஏகுவான் - மேற்றிசை
நோக்கிச் செல்வானாயினன்; அன்ன போது - அதுபோது, ஓர் ஏனம் - ஒரு
பன்றி, ஏன அரசு இருக்கும் அடவிவாய் - பன்றி யரசன் இருக்குங்
காட்டின்கண், முன்னர் ஓடி வந்து நின்று - முற்பட்டு ஓடி வந்து நின்று.
வந்த செய்தி மொழியும் - தான் வந்த செய்தியைக் கூறும்.
ஆல்
: அசை. (22)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
எங்களுக்
கரசே கேட்டி யிங்குள விருக மெல்லாந்
திங்களுக் கரசன் கொன்று வருகின்றா னென்று செப்ப
வெங்களிப் படைந்து பன்றி வேந்தனு மடுபோ ராற்றச்
சங்கையுற் றெழுந்து போவான் றன்னுயிர் பெடையை நோக்கா. |
(இ
- ள்.) எங்களுக்கு அரசே கேட்டி - எங்களுக்கு அரசனே
கேட்பாயாக, இங்கு உள விருகம் எல்லாம் - இங்குள்ள விலங்கு
களனைத்தையும், திங்களுக்கு அரசன் கொன்று வருகின்றான் என்று செப்ப -
சந்திர மரபிற்கு மன்னனாகிய பாண்டியன் கொன்று வாராநின்றான் என்று
சொல்ல, பன்றிவேந்தனும் - அப்பன்றி யரசனும், வெங்களிப்பு அடைந்து -
|