மிக்க களிப்பெய்தி,
அடுபோர் ஆற்றச் சங்கையுற்று - கொல்லுதலையுடைய போர் புரிய எண்ணி, எழுந்து போவான்
- எழுந்து செல்பவன், தன் உயிர்ப்
பெடையை நோக்கா - தனது உயிர் போன்ற பெண் பன்றியைப் பார்த்து.
கேட்டி,
ட் : எழுத்துப்பேறு; இ : எதிர்கால விகுதி. விருகம் - விலங்கு.
திங்கள் மரபிற்றோன்றிய அரசனைத் திங்களுக்கரசன் என்றார். வெம்மை
மிகுதி மேற்று. போர் பெற்றமை கருதிக் களிப்படைந்தது என்க. சங்கையுற்று
- எணணங்கொண்டு. வேந்தன் என்பதற் கேற்பப் போவான் என்றார். (23)
இன்றுபாண் டியனை நேரிட் டிருஞ்சம ராடி வென்று
வன்றிறல் வாகை யோாடு வருகுவ னேயோ வன்றிப்
பொன்றுவ னேயோ நீயுன் புதல்வரைப் பாது காத்து
நன்றிவ ணிருத்தி யென்ன நங்கைப்பே டின்ன கூறும். |
(இ
- ள்.) இன்று பாண்டியனை நேரிட்டு - இன்று பாண்டியனை
எதிர்த்து, இருஞ்சமர் ஆடி வென்று - பெரிய போர் புரிந்து வென்று,
வன்திறல் வாகையோடு வருகுவனேயோ - மிக்க வலியாற் பெற்ற வெற்றி
மாலையுடன் வருவேனோ, அன்றிப் பொன்றுவனேயோ - அல்லாமல் இறந்து
படுவேனோ (அறியேன்); நீ உன் புதல்வரைப் பாதுகாத்து நன்று இவண்
இருத்தி என்ன - நி உன் புதல்வர்களை நன்றாகப் பேணி இங்கு இருப்பாயாக என்று கூற,
நங்கைப் பேடு இன்ன கூறும் - பெண் பன்றி இங்ஙனங் கூறா
நிற்கும். வன்றிறல் : ஒருபொரு ளிருசொல். (24)
ஆவியங் கேக விந்த வாகமிங் கிருப்ப தேயிப்
பாவியோ மேனா ளிந்தப் பறழினை வகுத்த தெய்வம்
மாவம ராடி வென்று வருதியேல் வருவே னன்றி
நீவிளிந் திடத்து மாய்வே னிழலுக்குஞ் செயல்வே றுண்டோ. |
(இ
- ள்.) ஆவி அங்கு ஏக இந்த ஆகம் இங்கு இருப்பதே - உயிர்
அங்குச்செல்ல இந்த உடல் இங்கு இருப்பது வழக்காமோ, மேல் நாள் -
முன்னாளில், இந்தப் பறழினை வகுத்த தெய்வம இப் பாவியோ - இந்தக்
குட்டிகளை வகுத்த தெய்வம் இந்தப் பாவியோ, (அது வேறு ஆகலின் யானும் வந்து) மா அமர்
ஆடி வென்று வருதியேல் வருவேன் - நீ பெருஞ்சமர்
புரிந்து வெற்றி பெற்று வருவாயேல் உடன் மீளுவேன்; அன்றி - அல்லாமல்,
நீ விளிந்த இடத்து மாய்வேன் - நீ இறந்து படுவாயேல் அவ்விடத்திலேயே
யானும் இறந்தொழிவேன்; நிழலுக்கும் செயல் வேறு உண்டோ - உடம்பின்
நிழலுக்கு அவ்வுடம்பைத் தொடர்ந்து செல்வதன்றி வேறு செயலும் உளதோ?
எனக்கு
நின்னையன்றி வேறு உயிரில்லை யாகலின் யான் நின்னைப்
பிரிந்து வாழ்தல் கூடாதென்பாள் ஆவியங் கேக இந்த வாக மிங்கிருப்பதே என்றாள்.
ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. இக்குட்டிகளை இங்ஙனம் விதித்த
|