II


462திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தெய்வம் வேறுண்டாகலின் அதுவே அவற்றைப் புரக்க வல்லதன்றி யான்
அல்லேன் என்பாள் ‘இப் பாவியோ மேனாள் இந்தப் பறழினை வகுத்த
தெய்வம்’ என்றாளென்க. விளிவையேல் விளிந்த விடத்து என விரிக்க.
விளிந்த என்பதன் அகரம் தொக்கது. (25)

போதுக மெழுக வென்னாப் பொருக்கென வெழுந்து நீலத்
தாதுற ழேனப் பாட்டி தன்புடை தழுவிச் செல்லும்
பேதுறு பறழை நூக்கிப் பின்றொடர்ந் தணைந்து செல்லக்
காதெயிற் றெறுழி வேந்தன் காலென நடந்தா னன்றே.

     (இ - ள்.) போதுகம் எழுக என்னா - (ஆகலின்) செல்வோம் எழுக
என்று கூறி, பொருக்கென எழுந்து - விரைந்து எழுந்து, நீலத் தாது உறழ்
பாட்டி ஏனம் - இரும்பினை யொத்த நிறத்தினையுடைய பெண் பன்றி,
தன்படை தழுவிச்செல்லும் - தனது மருங்கில் தழுவி வாரா நின்ற, பேதுறு
பறழை நூக்கி - மன மயங்குதற் கேதுவாகிய குட்டிகளைத் தள்ளி, பின்
தொடர்ந்து அணைந்து செல்ல - பின்பற்றி நெருங்கிச் செல்லாநிற்க, காது
எயிற்று எறுழி வேந்தன் கால் என நடந்தான் - கொல்லுகின்ற பற்களை
யுடைய பன்றியரசன் காற்றைப் போல விரைந்து சென்றான்

.      பொருக்கென : விரைவுக்குறிப்பு. நீலத்தாது - நீலோற்பலத்தின்
மகரந்தமுமாம். பாட்டி என்பது பெண்பன்றியைக்குறிக்கும் மரபுப்பெயர்;

"பாட்டி என்பது பன்றியும் நாயும்"

என்பது தொல்காப்பியம். பேதுறு - மருளுகின்ற என்றுமாம். அன்று, ஏ :
அசைகள். (26)

பல்வகைச் சாதி யுள்ள பன்றியின் கணங்க ளெல்லாம்
வெல்படைத் தறுகட் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல்லெனத் தெழித்துச் செங்கட் டீயுக மான மென்னும்
மல்லல்வாம் புரவி மேல்கொண் டெழுந்தனன் வராக வீரன்.

     (இ - ள்.) பல்வகைச் சாதி உள்ள - பல்வேறு சாதியான, பன்றியின்
கணங்கள் எல்லாம் - பன்றிக் கூட்டங்கள் அனைத்தும், வெல்பதை் தறுகண்
சேனைவீரராய் முன்பு செல்ல - வெல்லும் படைக்கலமும் அஞ்சாமையுமுடைய
படை வீரராய் முன்னே செல்லாநிற்க, வராகவீரன் - பன்றிவீரன், செல்
எனத் தெழித்து - இடிபோல ஒலித்து, செங்கண் தீ உக - சிவந்த
கண்களினின்றுஞ் சினத்தீ சிந்த, மானம் என்னும் மல்லல் வாம் புரவிமேல்
கொண்டு எழுந்தனன்
- மானமென்கின்ற வலிய தாவுங்குதிரைமேலேறிப்
போருக்கு எழுந்தனன்.

     மானமானது ஈர்க்கச் சென்றமையின் அதனைப் புரவியாக உரு
வகித்தார். (27)