II


464திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



வீழ்த்தி, உரம் புதைபடக் கோடு ஊன்றி வதைத்தனர் - அவர்மார்பிற் புதையுமாறு கொம்பினை அழுத்திக் கொன்றார்கள்; சிலரை நேரே
வகிர்ந்தனர் - சிலர் உடலைச் சரிபாதியாகக் கிழித்தார்கள்.

     பதைத்தனர் : முற்றெச்சம். மாது, ஓ : அசைகள். (30)

தாள்சிதைந் தாருஞ் சில்லோர் தலைசிதைந் தாருஞ் சில்லோர்
தோள்சிதைந் தாருஞ் சில்லோர் தொடைசிதைந் தாருஞ் சில்லோர்
வாள்சிதைந் தாருஞ் சில்லோர் வரையறுத் தலரோன் றீட்டும்
நாள்சிதைந் தாருஞ் சில்லோர் நராதிபன் சேனை வீரர்.

     (இ - ள்.) நர அதிபன் சேனைவீரர் - பாண்டிவேந்தனுடைய படை
வீரர்களில், தாள் சிதைந்தாரும் சில்லோர் - கால் முறிந்தவர்களுஞ் சிலர்;
தலை சிதைந்தாரும் சில்லோர் - தலையுடைந்தவருஞ் சிலர்; தோள்
சிதைந்தாரும் சில்லோர் - தோள் முறிந்தவருஞ் சிலர்; தொடை சிதைந்தாரும்
சில்லோர் - தொடை நொறுங்கினவருஞ் சிலர்; வாள் சிதைந்தாரும் சில்லோர்
- வாட்படை அற்றாருஞ் சிலர்; அலரோன் வரையறுத்துத் ட்டுமாநள்
சிதைந்தாரும் சில்லோர் - பிரமன் வரை யறுத்து எழுதிய வாழ்நாள்
உலந்தாருஞ் சிலர்.

     நராதிபன் - மனிதர்களுக்குத் தலைவன்; அரசன். (31)

கண்டனர் கன்னி நாடு காவல னமைச்சர் சீற்றங்
கொண்டனர் முசல நேமி கூற்றென வீசி யார்த்தார்
விண்டனர் மாண்டார் சேனை வீரரு மனைய வெல்லைப்
புண்டவ ழெயிற்று வேந்தைப் புடைநின்ற பேடை நோக்கா.

     (இ - ள்.) கன்னிநாடு காவலன் அமைச்சர்கண்டன் - கன்னி
நாட்டினைக் காவல் செய்யும் பாண்டி மன்னனது அமைச்சர் இதனைக்
கண்டு, சீற்றம் கொண்டனர் - சினங்கொண்டு, கூற்றுஎன - கூற்றுவனைப்
போல, முசலம் நேதி வீசி ஆர்த்தனர் - இருப்புலக்கைகளையும்
திகிரிகளையும் எறிந்து ஆரவாரித்தனர்; சேனை வீரரும் விண்டனர்
மாண்டார் - (அவற்றால்) படைவீரரனைவரும் உயிர் வண்டு மாண்டனர்,
அனைய எல்லை - அப்பொழுது, புண்தவழ் எயிற்று வேந்தை - (பகைவரின்)
புலாலில் உலாவும் பற்களையுடைய பன்றிவேந்தனை, புடைநின்ற பேடை
நோக்கா - பக்கத்தில் நின்ற பெண் பன்றி பார்த்து.

     கண்டனர், கொண்டனர், விண்டனர் என்பன முற்றெச்சங்கள். புண்தவழ்
- தசை பொருந்திய என்றுமாம். எயிறு - பன்றிக் கோடு. (32)

ஏவிய சேனை யெல்லா மிறந்தன வினிநாஞ் செய்யல்
ஆவதென் வாளா நாமு மழிவதிங் கென்னை தப்பிப்
போவதே கரும மென்று புகன்றதத் துணையை நோக்கிச்
சாவதை யஞ்சா வேனத் தனியர சொன்று சாற்றும்.