(இ
- ள்.) ஏவிய சேனை எல்லாம் இறந்தன - ஏவிய படை முழுதும்
மாண்டன; இனி நாம் செய்யலாவது என் - இனி நாம் செய்யக்கடவது
என்னை, நாமும் வாளா இங்கு அழிவது என்னை - நாமும் கொன்னே இங்கு
மடிவது என் கருதி, தப்பிப்போவதே கருமம் என்று புகன்றது - உயிர் தப்பி
ஓடிப்பாவேதே நமக்குரிய செயலாகும் என்று கூறியது; சாவதை அஞ்சா ஏனத்
தனி அரசு - இறப்பினை அஞ்சாத ஒப்பற்ற பன்றியரசு, அத்துணையை
நோக்கி ஒன்று சாற்றும் - அங்ஙனங் கூறிய மனைவியை நோக்கி ஒன்று
கூறாநிற்கும்.
ஏவிய
- ஏவப்பட்ட : செயப்பாட்டு வினைப்பொருளில் வந்த
செய்வினை.அழிவது என்னை - அழிதலாற் பயன் யாது. சாவது - சாதல் :
தொழிற்பெயர். (33)
நுண்ண றிவுடைய ராகி நூலொடு பழகி னாலும்
பெண்ணறி வென்ப தெல்லாம் பேமைதைத் தாத லாலுன்
கண்ணறி வுடைமைக் கேற்ற காரிய முரைத்தாய் மானம்
எண்ணறி வுடையோர்க் கெல்லா மிழுக்குடைத் தன்றோ வீதால். |
(இ
- ள்.) நுண் அறிவு உடையராகி - நுண்ணிய அறிவினை
யுடையராய், நூலொடு பழகினாலும் - பல நூல்களோடு பன்னாட் பழகினும்,
பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமைத்து - பெண்ணறிவு என்று
சொல்லப்படுவதெல்லாம் பேதைமையை யுடையது; ஆதலலல் - ஆதலினால்,
உன்கண் அறிவுடைமைக்கு ஏற்ற காரியம் உரைத்தாய் - உன்னிடத்துள்ள
அறிவுடைமைக்குப் பொருந்திய கருமத்தைக் கூறினாய்; மானம் எண் அறிவு
உைையோர்க்கு எல்லாம் - மானத்தைப் பொருளாகக் கருதும் அறிவுடையோர் அனைவர்க்கும்,
ஈது இழுக்கு உடைத்து அன்றோ - இது குற்றமுடைய
தல்லவா?
"நுண்ணறி வுடையோர்
நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே" |
என்பது தொன்மொழி.
என்பதெல்லாம்இ ஒருமைப்பன்மை : மயக்ம்;
"உள்ளுவதெல்லாம்" என்புழிப்போல. உன்கண் அறிவுடைமைக்கு ஏற்ற -
உனக்கு இயல்பாகிய பேதைமையறிவுக்கேற்ற, ஈது - போரிற்
புறங்காட்டுதலாகிய இச்செயல், ஆல் : அசை. (34)
தூங்கிருள் வறுவாய்ச் சிங்க மிரண்டுறை துறையின் மாடோர்
வாங்கிரு மருப்புக் கேழல் வந்துநீர் பருகி மீளும்
வீங்கிரு ளுடற்கா ரேன மொன் றுறை துறையில் வீரந்
தாங்கிரு மடங்க னீர்க்குத் தலைப்பட வஞ்சு மன்றே. |
(இ
- ள்.) இருள் தூங்கு வறுவாய்ச் சிங்கம் இரண்டு - இருள் தங்கிய
வறி வாயையுடைய இரண்டு சிங்கள்கள், உறை துறையின் மாடு - உறைகின்ற
நீர்த்துறையின்கண், வாங்கு இருமருப்பு ஓர் கேழல் - வளைந்து இரண்டு
கொம்புகளையுடைய ஒரு பன்றி, வந்து நீர் பருகி மீளும் - அஞ்சாது வந்து
நீர் குடித்துச்செல்லும்; வீங்கு இருள்
|