II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்467



ஆர்ப்பவன் போல - கூடற்றலைவனாகிய பாண்டியனே நிற்பாயாக என்று
கூறி ஆரவாரிப்பவனைப் போல, கொதித்து நேர்ந்தான் - வெகுண்டு
எதிர்ந்தான்.

     கருமா - பன்றி. கணங்களெல்லாவற்றையும் என இரண்டனுருபு
விரித்து, உயிருண்டனம் என்பதை ஒரு சொல்லாக்கி முடிக்க. ஊனில் :
இடைப்பிறவரல், ஓடல், அல் : எதிர்மறைக்கண் வந்தது; "மகனெனல்"
என்புழிப் போல. கோன் : விளி. (37)

நிலத்தைக் கிளைத்துப் பிலங்காட்டி நிமிர்ந்த தூள்வான்
தலத்தைப் புதைப்பத் தனியேன வரவு நோக்கி
வலத்தைப் புகழ்ந்தான் வியந்தான் சிலைவாங்கி வாளிக்
குலத்தைச் சொரிந்தான் பொருநைத்துறைக் கொற்கை வேந்தன்.

     (இ - ள்.) நிலத்தைக் கிளைத்துப் பிலம் காட்டி - நிலத்தைக் கீறிப்
பாதலத்தைக் காண்பித்து, நிமிர்ந்த தூள் - மேலெழுந்த புழுதிப் படலம்,
வான் தலத்தைப் புதைப்ப - விண்ணுலகினை மறைக்க (வருகின்ற), தனி
ஏன வரவு - ஒப்பில்லாத பன்றியின் வருகையை, பொருநைத்துறைக்
கொற்கை வேந்தன் நோக்கி - பொருநையாற்றின் துறையையும் கொற்கைப்
பதியையும் உடைய பாண்டி வேந்தன் கண்டு, வலத்தைப் புகழ்ந்தான்
வியந்தான் - அதன் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டி, சிலை வாங்கி - வில்லை
வளைத்து, வாளிக் குலத்தைச் சொரிந்தான் - அம்புக் கூட்டத்தைச்
சொரிந்தான்.

     புதைப்ப வருகின்ற ஏன வரவு என விரித்துரைக்க. புகழ்ந்தான்,
வியந்தான் என்பன முற்றெச்சங்கள். குலம் - கூட்டம். (38)

குறித்துச் செழியன் விடுவாளியைக் கோல வேந்தன்
பறித்துச் சிலவாளியை வாய்கொடு பைம்பு லென்னக்
கறித்துச் சிலவாளியைக் கால்பொடு தேய்த்துத் தேய்த்து
முறித்துச் சிலவாளியை வாலின் முறித்து நின்றான்.

     (இ - ள்.) செழியன் - பாண்டியன், குறித்து விடு வாளியை -
தன்னைக் குறியாகக் கொண்டு விட்ட அம்புகளை, கோலவேந்தன் பறித்து -
பன்றியரசன் (உடம்பினின்றும்) பிடுங்கி, சில வாளியை வாய்கொடு பைம்புல்
என்னக் கறித்து - (அவற்றுள்) சில வாளிகளை வாயாலே பசிய புல்லைக்
கறித்தல் போலக் கடித்தும், சில வாளியைக் கால் கொடு தேய்த்துத் தேய்த்து
முறித்து - சில கணைகளைக் காலாலே தேய்த்துத் தேய்த்து முறித்தும், சில
வாளியை வாலின் முறித்து நின்றான் - சில அம்புகளை வாலினால் முறித்தும்
நின்றனன்.

     கோலம் - பன்றி. உடம்பினின்றும் பறித்தென்க. கொடு - கொண்டு :
மூன்றாம் வேற்றுமைச் சொல். (39)