மானம் பொறாது மதியின்வழி வந்த வேந்தன்
தானம் பொறாது கவிழ்க்கும்புகர்த் தந்தி கையில்
ஊனம் பொறாத முசலங்கொடுத் தேறி யுய்த்தான்
ஏனம் பொறாதார்த் திடியேற்றி னெழுந்த தன்றே. |
(இ
- ள்.) மதியின் வழி வந்த வேந்தன் - சந்திரன் மரபில் வந்த
இராசராச பாண்டியன், மானம் பொறாது - மனாம் மீக்கூர, தானம் பொறாது
கவிழ்க்கும் - மதநீரைப் பொறுக்கலாற்றாது கொட்டுகின்ற, புகர்த் தந்தி
கையில் - முகத்திற் புள்ளிகளையுடைய யானையின் கையில், ஊனம் பொறாத
முசலம் கொடுத்து - குற்றமில்லாத இருப்புலக்கையைக் கொடுத்து, ஏறி
உய்த்தான் - ஏறிச் செலுத்தினான்; ஏனம் பொறாது - (அதனைக் கண்ட)
பன்றி பொறுக்கலாற்றாது, இடி ஏற்றின் ஆர்த்து எழுந்தது - இடியேறு போல
முழங்கி எழுந்தது.
மானத்தாற்
பொறுக்கலாற்றாது என்றுமாம். ஓர் விலங்கினால்
அலைப்புண்டனன் எனப் பிறர் கூறும் பழிக்கு ஆற்றாது நொந்தனன்
என்பார் 'மானம் பொறாது' எனவும் வீரமில்லாத ஒரு விலங்கினால் வீர மிக்க
எம்மைக் கொல்லக் கருதினன் என்று வெகுண்டதென்பார் 'ஏனம்
பொறாதார்த்து' எனவும் கூறினார். தானம் - மதநீர். ஏற்றின், இன் : ஒப்புப்
பொருட்டு. அன்று, ஏ : அசைகள். (40)
தந்திப் பொருப்பைத் துணிக்கென்று தழன்று சீற்றம்
உந்திக் கதலிக் கொழுந்தண்டென வூசற் கையைச்
சிந்திப் பிறைவா ளெயிறோச்சிச் சிதைத்து வீட்ட
முந்திக் கடுந்தேர் மிசைப்பாய்ந்தனன் மூரித் தாரான். |
(இ
- ள்.) தந்திப் பொருப்பைத் துணிக்கு என்று - யானையாகிய
மலையைத் துணிப்பேன் என்று, தழன்று - கொதித்து, சீற்றம் உந்தி -
சினமானது செலுத்த, கதலிக் கொழுந்தண்டு என - வாழையின் கொழுவிய
தண்டைப் போல ஊசல், கையைச் சிந்தி - ஊசல் போல் அசைகின்ற
துதிக்கையைத் துணித்து, பிறைவாள் எயிறு ஓச்சி - பிறை போன்ற ஒள்ளிய
மருப்பினைக் கடாவி, சிதைத்த வீட்ட - உடலைச் சிதைத்துக் கொல்ல,
மூரித்தாரான் - வலிய சேனையினையுடைய பாண்டியன், முந்தி - முற்பட்டு,
கடுந்தேர்மிசைப் பாய்ந்தனன் - விரைந்த செலவினையுடைய தேரின்மேற்
பாய்ந்தேறினான்.
துணிக்கு
- துணிப்பேன்; கு : தன்மை யொருமை எதிர்கால விகுதி.
உந்தி - உந்த; எச்சத்திரிபு. தார் - படை. (41)
திண்டேர் மிசைநின் றடனேமி திரித்து விட்டான்
கண்டேன வேந்தன் விலக்கிக் கடுங்காலிற் பாய்ந்து
தண்டே ருடையத் தகர்த்தான்பரி தன்னிற் பாய்ந்து
வண்டேறு தாரான் விடவேலை வலந்தி ரித்தான். |
|