ஒழுகுகின்ற மதத்தினையும்,
ஊசல் ஆடிய ஒற்றைக் கையும் - ஊஞ்சல்
போல ஆடா நின்ற ஒற்றைத் துதிக்கையும், ஏற்று - பொருந்தி,
எழுவிடம்போல் சீறி - (கடலின்கண்) எழுந்த நஞ்சினைப்போல வெகுண்டு,
கூற்று எழு தோற்றம்போல அஞ்சனக் குன்றம்போல கூற்றுவன் எழுந்த
தோற்றம் போலவும் நீலமலை எழுந்த தோற்றம் போலவும், ஓர் தறுகண்
யானை எழுந்தது - ஓர் அஞ்சாமையையுடைய யானை எழுந்தது.
காற்று
எழுகின்ற செவி என்றும், வாயாற் கௌவப்பட்ட மருப்பு
என்றும் உரைத்தலுமாம். ஆறாக என்றது ஈறு தொக்கது; மாறா எனப்
பிரித்தலுமாம். கொலைத் தொழிலுக்குக் கூற்றத்தையும், வடிவிற்கு
அஞ்சனமாலையையும், சினத்திற்கு விடத்தையும் உவமை கூறினார். (14)
அந்தமா வேள்வித் தீயு மவியமும் மதமுஞ் சோர
வந்தமா களிற்றை நீபோய் வழுதியை மதுரை யோடுஞ்
சிந்தவே தொலைத்தி யென்னாத் தென்றிசைச் செல்ல வேவி
முந்தவே விடுத்த மாசு மூழ்கட லமணப் பேய்கள். |
(இ
- ள்.) அந்த வேள்வி மாதீயும் அவிய - அந்த வேள்விக்
குண்டத்துப் பெரிய தீயும் அவியுமாறு, மும்மதமும் சோரவந்த மாகளிற்றை -
மூன்று மதங்களும் சொரிய எழுந்த பெரிய யானையை, மாசு மூழ்கு உடல்
அமணப்பேய்கள் - அழுக்கில் மூழ்கிய உடலினை யுடைய சமணப் பேய்கள்
(நோக்கி), நீ போய் - நீ சென்று, வழுதியை மதுரை யோடும் சிந்தத்
தொலைத்தி என்னா - விக்கிரம பாண்டியனை மதுரைப் பதியோடும்
அழியும்படி தொலைப்பாயாக என்று, தென்திசை முந்தவே செல்ல ஏவி
விடுத்த - தென் திசைக்கண் முற்படச் செல்லுமாறு பணித்து விடுத்தன.
அத்தீயினும்
கொடுமையுடைய தென்பார் தீயும் அவிய என்றார்.
அந்தமா அவிய என்றுமாம்; அந்தமா - முடிவாக; அஃது அவிந்து
தொலைந்ததென்னும் குறிப்பிற்று. செறலினால் அமணப் பேய்கள் விடுத்த
என்றார். நிரம்பாத ஆசையுடைமையாலும் கொடுமையாலும் பேய்களாக்கிக்
கூறினார். விடுத்த : அன்சாரியை பெறாத பலவின்பால் முற்று. (15)
[கலி
விருத்தம்]
|
அருளற்றிரு
ளுடலிற்புதை யமணக்கய வர்களுட்
டெருளற்றரு மறையிற்படர் செயலற்றிக பரமெய்ப்
பொருளற்றவ னனிகத்தொடு புறமொய்த்திட மதமா
வெருளற்றிடி குரலிற்படி வெடிபட்டிட வருமால். |
(இ
- ள்.) அருள் அற்று உடலில் இருள்புதை அமணக் கயவர்கள் -
கருணை சிறிதுமின்றி (கருமையாற் புதைந்த) உடல்போல மற இருளால்
மூடப்பெற்ற சமணக் கீழ்மக்கள், உள் தெருள் அற்று - அகத்திலே தெளிந்த
அறிவின்றி, அருமறையில் படல் செயல் அற்று - அரிய வேதநெறியிற்
|