வேனிற் சிழவோனில் விளங்கி வியந்து வானோர்
தேனிற் பொழிபூ மழைபெய்ய நனைந்து தெய்வக்
கானத்* தமுதுண் டிருகாது+களித்து வீர
வானத் தமுதுண் டரமங்கையர் கொங்கை சேர்ந்தான். |
(இ
- ள்.) வேனில் கிழவோனில் விளங்கி - வேனிற் காலத்துக்கு
உரிமை பூண்ட மன்மதன் போல் விளங்கி, வானோர் வியந்து பொழிபூ -
தேவர்கள் வியப்புற்றுப் பொழியும் பூக்கள், தேனின் மழை பெய்ய நனைந்து
- தேனாகிய மழையினைப் பொழிய அதில் நனைந்து, தெய்வக் கானத்து
அமுது இரு காது உண்டு களித்து - தெய்வத் தன்மை பொருந்திய
இசையாகிய அமுதினை இரண்டு செவிகளாலும் பருகி மகிழ்ந்து, வீரவானத்து
அமுது உண்டு - வீர சுவர்க்கத்துள்ள தேவ அமுதினை உண்டு,
அரமங்கையர் கொங்கை சேர்ந்தான் - அரமாதர்களின் கொங்கையை
அணைந்தான்.
அங்ஙனம்
துறக்கம் புக்கவன் பேரழகுடைய திப்பிய யாக்கை
யுடையனாய் ஐம்புல இன்பங்களும் ஆரத்துய்த்தனன் என்றார். விளங்கி
நனைந்து உண்டு உண்டு சேர்ந்தான் என வினை முடிக்க. (45)
[கலிவிருத்தம்]
|
பின்றுணை
யாய பெடைத்தனி யேனம்
என்றுணை மாய விருப்பது கற்போ
வென்றில னேனும் விசும்படை வேனால்
என்றிகல் வேந்தை யெதிர்த்த துருத்தே. |
(இ
- ள்.) பின் - பின்னர், துணையாய தனிபெடை ஏனம் -
துணையாக நின்ற ஒப்பற்ற பெண் பன்றி, என் துணை மாய - என்
துணைவன் இறந்தொழிய, இருப்பது கற்போ - யான் உயிருடன்
இருப்பது கற்பு நெறியாமோ, வென்றிலனேனும் விசும்பு அடைவேன்
என்று - வெல்லா விடினும் என் துணைவனோடு விண்ணுலகைச்
சேர்வேனென்று கருதி, இகல் வேந்தை உருத்து எதிர்தத்து -
பகைமையையுடைய பாண்டி மன்னனைச் சினந்து எதிர்த்தது.
கணவன்
துஞ்சியக்கால் உடன்றுஞ்சுதல் உத்தமக் கற்புடை
மகளிர் இயல்பு; இதனை,
"காதல ரிறப்பிற்
கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது
இன்னுயி ரீவர்" |
என்னும் மணிமேகலையானறிக.
ஆல் : அசை. (46)
(பா
- ம்.) * தெய்வகானத்து. +|இருகாதும்.
|