II


472திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     இம்மென : விரைவுக் குறிப்பு. உயிர்சோர்கின்றவன் விரைய இருப்புத்
தண்டினைப் பெடையின் தலையிற் புடைத்துக் கொன்று தானும் உயிர்
துறந்தான் என்க. அருந்திறல் வானம் - வீரசுவர்க்கம். அன்று, ஏ :அசைகள்;
அப்பொழுதே என்றுமாம். (49)

வன்றிறன் மன்னவர் மன்னவ னுந்தன்
பொன்றிகழ் மாநகர் புக்கன னிப்பாற்
பன்றி விழுந்து பருப்பத மாகா
நின்றது பன்றி நெடுங்கிரி யென்ன.

     (இ - ள்.) வன்திறல் மன்னவர் மன்னவனும் - மிக்க வலியினை
யுடைய இராசராச பாண்டியனும், தன்பொன் திகழ் மாநகர் புக்கனன் - தனது
அழகு விளங்கா நின்ற பெரிய நகரிற் புகுந்தான்; இப்பால் - இப்புறம், பன்றி
விழுந்து - அப்பன்றி கீழே விழுந்து, பன்றி நெடுங்கிரி என்ன - நெடிய
பன்றி மலை என்று அனைவருங் கூற, பருப்பதம் ஆகா நின்றது - மலையாகி
நின்றது.

     வன்றிறல் : ஒருபொருட் பன்மொழி. மன்னவர் மன்னவன் : பெயர்.
(50)

அன்று தொடுத்தத னுக்கது பேராய்
இன்றும் வழங்குவ திம்பரி னந்தக்
குன்றி லருந்தவர் விஞ்சையர் கோபம்
வென்றவ ரெண்ணிலர் வீடுற நோற்பார்.

     (இ - ள்.) இம்பரில் - இந்நிலவுலகில், அன்று தொடுத்து -
அக்காலந்தொட்டு, அதனுக்கு அது பேராய் - அம்மலைக்கு அதுவே
பெயராகி,இன்றும் வழங்குவது - இஞ்ஞான்றும் வழங்கா நின்றது;
அந்தக் குன்றில் - அந்தப் பன்றி மலையில், அருந்தவர் விஞ்சையர்
எண்ணிலர் - முனிவரும் விஞ்சையருமாகிய அளவிறந்தோர், கோபம்
வென்றவர் - சினத்தைக் களைந்தவராகி, வீடு உற நோற்பார் -
வீடுபேற்றினை அடையத் தவஞ் செய்வார்கள்.

     தொடுத்து - தொடங்கி. அருந்தவர் - முனிவர். கோபம்
வென்றெனவே காம மயக்கங்களை வென்றென்பதும் உபலக்கணத்தாற்
பெறப்படும். (51)

[கலிநிலைத்துறை]
என்று கூறிய வருந்தமிழ்க் கிறைவனை நோக்கித்
துன்று மாதவ ரறிவிலாச் சூகர வுருவக்
குன்றின் மீதிருந் தவரெலாங்* கோதற நோற்று
நின்ற காரணம் யாதெனனக் குறுமுனி+நிகழ்த்தும்.

     (இ - ள்.) என்று கூறிய அருந்தமிழ்க்கு இறைவனை நோக்கி -
என்று இங்ஙனங் கூறியருளிய அரிய தமிழுக்கு இறைவனாகிய அகத்திய
முனிவனைப் பார்த்து, துன்றும் மாதவர் - நெருங்கியிருந்த முனிவர்கள்,
அவர் எலாம் - அம்முனிவர் விச்சாதரரெல்லாம், அறிவு இலாச் சூகர


     (பா - ம்.) * அருந்தவரெலாம். +குடமுனி.