மன்னர்
மன்னன் என்பதற்கு மேல் உரைத்தமை காண்க; இரட்டுற
மொழிதலாக்கி, அரசர்க்கு அரசனாகிய இராசராச பாண்டியன் என்றுரைத்தலும் பொருந்தும்.
பெறுகென : அகரந்தொகுத்தல். முனிவன் பணித்தனன் என்க.
(54)
ஆய புண்ணிய
விஞ்சைய னாகமாய்க் கிடந்த
தூய நீரதா லவ்வரை மீமிசைத் துறந்த
பாய கேள்விய ரிறைகொளப் பட்டதெவ் வுயிர்க்கும்
நாய னார்மது ரேசரு நயந்தவ ணுறைவார். |
(இ
- ள்.) ஆய புண்ணிய விஞ்சையன் - அந்தப் புண்ணிய
வடிவினனாகிய இயக்கனுடைய, ஆகமாய்க் கிடந்த தூய நீரதால் - உடலாகக்
கிடந்த தூய தன்மையை யுடையதாதலால், அவ்வரை - அம்மலை, மீமிசை -
தன்மேல், துறந்த பாய கேள்வியர் இறை கொள்ளப்பட்டது - முற்றத் துறந்த
பரந்த நூற்கேள்வியினையுடைய முனிவர் முதலியோரால் தங்கப்பட்டது;
எவ்வுயிர்க்கும் நாயனார் மதுரேசரும் - எல்லாவுயிர்கட்கும் இறைவராகிய
மதுரை நாயகரும், அவண் நயந்து உறைவார் - அவ்விடத்தில் விருப்பத்துடன்
எழுந்தருளியிருப்பர்.
நீரது
- நீர்மையுடையது. ஆல் - ஆகையால். மீமிசை ஒரு பொருட்
பன்மொழி. இறைகொளல் - தங்கல். (55)
என்ற கத்தியன் விடைகொடுத் தியம்பின னிப்பாற்
பன்றி யேற்றையும் பாட்டியும் பைம்புனத் திட்டுச்
சென்ற விந்தபின் பன்னிரு குருளையுந் திகைப்புற்
றன்ற லக்கணோ யுழந்தமை யாரளந் துரைப்பார். |
(இ
- ள்.) என்று அகத்தியன் விடை கொடுத்து இயம்பினன் - என்று
அகத்திய முனி விடை கூறியருளினன்; இப்பால் - பின், பன்றி ஏற்றையும்
பாட்டியும் - ஆண் பன்றியும் பெண் பன்றியும், பைம் புனத்து இட்டுச்
சென்று அவிந்த பின் - பசிய காட்டின்கண் விட்டுப் போய் மாண்ட பின்னர்,
பன்னிரு குருளையும் பன்னிரண்டு குட்டிகளும், திகைப்புற்று - திகைத்து,
அன்று அலக்கண் நோய் உழந்தமை - அந்நாள் துன்பநோயிற்பட்டு
வருந்தியதை, அளந்து உரைப்பார் யார் - வரையறுத்துக் கூறவல்லார் யார்
(ஒருவருமில்லை என்றபடி.)
ஏற்றை
- விலங்கின் ஆண்;
என்னும் தொல்காப்பியர்
சூத்திரத்தால் ஏற்றை பெயராதல் அறிக. (56)
ஓடு கின்றன தெருமர லுறுவன நிழலைத்
தேடு கின்றன தாய்முலைத் தீயபால் வேட்டு
வாடு கின்றன தாகவெம் பசிநனி வருத்த
வீடு கின்றன வெயில்சுட வெதும்புகின் றனவால். |
|