II


476திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கிட்டு கின்றதந் தாயெதிர் குட்டியுங் கிட்டி
முட்டு கின்றன மோப்பன* முதுகுறத் தாவி
எட்டு கின்றன கால்விசைத் தெறிவன நிலத்தை
வெட்டு கின்றன குதிப்பன வோடுவ மீள்வ.

     (இ - ள்.) கிட்டுகின்ற தம் தாய எதிர் - அங்ஙனம் நெருங்கி
வருகின்ற தங்கள் - தாயினெதிரே, குட்டியும் - குட்டிகளும், கிட்டி
முட்டுகின்றன - நெருங்கி மோதுவனவும், மோப்பன - மோப்பனவும், முதுகு
உறத் தாவி எட்டுகின்றன - முதுகிற் பொருந்தத் தாவி எட்டுவனவும், கால்
விசைத்து எறிவன நிலத்தை வெட்டுகின்றன - காலை விசைந்துப் பின் எறிந்து
நிலத்தை வெட்டுவனவும், குதிப்பன ஓடுவ மீள்வ - குதிப்பனவும் ஓடுவனவும்
மீள்வனவும் ஆயின.

     எறிவனவாய் வெட்டுகின்றன என்க. தாயைக் கண்ட உவகையால்
இங்ஙனம் செய்தன. பன்றிக் குட்டிகளின் தொழிற்றிறங்களை நன்கு
விளக்குதலால் இச் செய்யுள் தன்மை நவிற்சியாகும். (60)

ஏன மின்னமுங் காண்பரி தாகிய வேனம்
ஆன மெய்ம்மயிர் முகிழ்த்திடத் தழுவிமோந் தருளின்
மான மென்முலை யருத்திமா வலனும்வன் றிறனும்
ஞான மும்பெருந் தகையுநற் குணங்களு நல்கா.

     (இ - ள்.) ஏனம் இன்னமும் காண்பரிதாகிய ஏனம் - திருமாலாகிய
பன்றி இன்னமுங் காண்டற் கரிதாகிய பன்றி, மெய் ஆன மயிர் முகிழ்த்திட
- மெய்யிலுள்ள மயிர் முகிழ்க்க, தழுவி மோந்து - அவற்றை அணைத்து
மோந்து, அருளின் மானம் மென்முலை அருத்தி - அருளினாற் சுரந்த பெரிய
மெல்லிய முலைப்பாலை ஊட்டி, மாவலனும் வன்றிறனும் - சிறந்த வெற்றியும்
மிக்க வலியும், ஞானமும் பெருந்தகையும் நற்குணங்களும் நல்கா - ஞானமும்
பெருந்தகைமையும் ஏனை நற்குணங்களுமாகிய இவற்றைத் தந்தருளி.

     திருமால் பன்றியுருவெடுத்துத் தேடி இன்னமும் காண்டற்கரிய பரம்
பொருளாகிய சிவபெருமான் தான் ஒரு பெண் பன்றியாகிப் பன்றிக் குட்டிகள்
இருக்குமிடம் தேடி வந்து அவற்றிற்கு முலை கொடுத்தருளினன் என
இறைவன் வானோர்க் கரியனாயும் ஏனோர்க் கெளியனாயும் இருக்குந்
தன்மையை நயம்படக் கூறினார். இறைவன் அளித்த பால் திருவருள்
ஆகையால் வலம் முதலிய யாவும் அவற்றிற்கு எய்துவனவாயின என்க :
குழவிகள் பின் எய்தும் நலங்களுக்கெல்லாம் முன் உண்ட தாய்ப்பால்
காரணமாமென்பதும் இதனாற் பெறப்படுதல் ஓர்க. (61)

துங்க மாமுக மொன்றுமே சூகர முகமா
அங்கம் யாவையு மானுட யாக்கைய வாக்கிக்
கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயற்கண்
மங்கை நாயகன் கருணையாந் திருவுரு மறைந்தான்.

     (பா - ம்.) * மொய்ப்பன.