(இ
- ள்.) துங்கமாமுகம் ஒன்றுமே சூகர முகமா - சிறந்த பெரிய
முகம் ஒன்றனையும் பன்றி முகமாக (வைத்து), அங்கம் யாவையும் - ஏனைய
உறுப்புக்களனைத்தையும், மானுட யாக்கைய ஆக்கி - மக்கள் உடலிலுள்ள
உறுப்புக்களாகச் செய்து, கங்கை நாயகன் - கங்கையின் கேள்வனும், கடவுளர் நாயகன்
- தேவர்கள் தலைவனும், கயற்கண் மங்கை நாயகன் - அங்கயற்கண்
ணம்மையின் நாதனுமாகிய சோம சுந்தரக் கடவுள், கருணையாம் திருஉரு
மறைந்தான் - அருளாற் கொண்ட அத்திருவுருவம் மறைந்தருளினான்.
யாக்கையவாக
ஆக்கி என விரிக்க. (62)
இம்மை யிப்பவத்
தன்னையா யினிவரு பவமுஞ்
செம்மை செய்தசே தனத்தையுஞ் சேதனஞ் செய்தார்
எம்மை யெப்பவத் தாயினு மெனைப்பல வுயிர்க்கும்
அம்மை யப்பராய்க் காப்பவ ரவரலா லெவரே. |
(இ
- ள்.) இம்மை இப்பவத்து அன்னையாய் - இந்நிலவுலகில் இப்
பன்றியாகிய பிறப்பின்கண் தாயாய் வந்து முலை கொடுத்து, அசேதனத்தையும்
சேதனம் செய்து - அறிவில்லாத பன்றிக் குட்டிகளையும் அறிவுடை
மக்களாகச் செய்து, இனி வரு பவமும் செம்மை செய்தார் - மேல் வரும்
பிறவியையுந் தூய்மையாக்கினார்; எம்மை எப்பவத்து ஆயினும் -
எவ்வுலகத்தில் எப்பிறவியிலாயினும், எனைப் பல உயிர்க்கும் - பல வகையான உயிர்களெல்லாவற்றுக்கும்,
அம்மை அப்பராய் காப்பவர் - தாயும்
தந்தையுமாகி நின்று காப்பவர். அவர் அலால் எவர் - அவரேயல்லால் வேறு
யாவர்? (ஒருவருமில்லை என்றபடி.)
அசேதனம்
- பகுத்தறிவில்லது. சேதனம் - பகுத்தறிவுள்ளது. சேதனஞ்
செய்து செம்மை செய்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக. எவ்விடத்து
எப்பிறப்பிலும் அருள் செய்பவர் சிவபெருமான் என்பதனை,
"எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினும் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியு மெம்பெருமான்" |
என ஆளுடைய
பிள்ளையார் அருளிச் செய்தல் காண்க. அம்மையப்பராய்
என்னும் தொடர் "அம்மையே அப்பா என்னும் திருவாசகத்தை
நினைவூட்டுகின்றது. இங்ஙனம் இறைவன் பன்றிக்குட்டிகளுக்குப் பால்
கொடுத்தருளிய பெருங்கருணைத் திறத்தை;
"ஏவுண்ட பன்றிக்
கிரங்கி யீசன் எந்தை பெருந்துறை யாதி யன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொ டுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே" |
எனத்
திருவாதவூரடிகள் அருளிச் செய்தல் காண்க. (63)
ஆகச்
செய்யுள் 2255.
|