II


பன்றிக்குட்டிக்கு மந்திரிகளாக்கிய படலம்479



அனைய ராயவர் வைகுநா ளறைபுனற் கூடற்
புனித நாயக னருட்டிற முயிர்க்கெலாம் பொதுவாய்
இனிய வாவன வென்பதை யாவருந் தேற
வனிதை பான்மொழி மங்கைதன் மணாளனை வினவும்.

     (இ - ள்.) அவர் அனையராய் வைகுநாள் - அவர்கள்
அத்தன்மையராய் இருக்கும் நாளில், அறை புனல் கூடல் புனித நாயகன் -
ஒலிக்கும் நீர் சூழ்ந்த மதுரையில் எழுந்தருளிய நின்மலனாகிய சோம சுந்தரக்
கடவுளின், அருள் திறம் - திருவருளின் வகைகள், உயிர்க்கு எலாம்
பொதுவாய் இனிய ஆவன என்பதை - எல்லா உயிர்கட்கும் பொதுவாய்
நின்று இன்பந்தருவன என்று ஞான நூல்கள் கூறுவதனை, யாவரும் தேற -
அனைவருந் தெளிந்துய்ய, வனிதை பால் மொழி மங்கை தன் மணாளனை
வினவும் - சத்தியாகிய பால் போலும் மொழிகளையுடைய
அங்கயற்கண்ணம்மை தன் கேள்வனை வினவா நிற்கும்.

     மங்கையாகிய வனிதை என்றுரைத்தலுமாம். (3)

வெவ்வி லங்கினும் வெய்யதா* யசேதன விலங்காம்
இவ்வி லங்கெயிற் றேனமென் குருளைகட் கிரங்கிக்
கைவி லங்கினை யெய்தநீ கருணையாய் முலைதந்
திவ்வி லங்கறி வகற்றிய தியாதென விறைவன்.

     (இ - ள்.) வெவ்விலங்கினும் வெய்யதாய் - கொடிய விலங்குகளினுங்
கொடியதாய், அசேதன விலங்கு ஆம் - அறிவில்லாத விலங்காகிய, இவ்
இலங்கு எயிற்று ஏனம் மென் குருளைகட்கு - இந்த விளங்கும் பற்களை
யுடைய பன்றியின் இளமை வாய்ந்த குட்டிகளுக்கு, இரங்கி - இரக்கமுற்று,
கைவிலங்கினை எய்த நீ - (சமணரேவிய) யானையை எய்து வீழ்த்திய நீ,
கருணை - அருளாலே ஆய், - தாய்ப் பன்றியாகி, முலை தந்து - முலைப்
பால் கொடுத்து, இவ்விலங்கு அறிவு அற்றிது யாது என - இந்த விலங்கின்
அறிவைப் போக்கியருளியது என்னை என்று வினவ, இறைவன் - சோம
சுந்தரக் கடவுள்.

     முன்பு ஒரு பாண்டியனுக்கிரங்கி யானையைக் கொன்றருளிய தேவரீர்
இன்று ஒரு பாண்டியனால் வேட்டத்திற் கொல்லப்பட்ட கொடிய விலங்காகிய
பன்றியின் குருளைகட்கு இரங்கி முலை தந்ததும் அவற்றிற்கு இழிந்த அறிவை
நீக்கி நல்லறிவு தந்ததும் எக்காரணத்தால் என வினவினரென்க. கை விலங்கு -
யானை, கருணையாய் என்பதற்கு இரக்கமுடையையாய் என்றுமாம். எய்தநீ
இரங்கி முலை தந்து அறிவகற்றியது என இயையும். (4)

அகில வேதமு மாகம பேதமு நம்மைச்
சகல சீவத யாபர னென்றுரை சால்பால்
இகலில் சேதன மசேதன மாகிய விரண்டும்
புகலில் வேறல வெமக்கவை பொதுமை வதனால்.

     (பா - ம்.) * வெய்யவாய்.