செல்லுந் தொழிலின்றி,
இகபரம் மெய்ப்பொருள் அற்றவன் - இம்மை
மறுமைப் பயனும் வீடுபேறும் இல்லாதவனாகிய சோழனது, அனிகத்தொடு -
சேனையுடன், புறம் மொய்த்திட - புறத்தே நெருங்கிவர, மதமா - அந்த
மதயானையானது, வெருள் அற்று - அஞ்சு தலின்றி, இடி குரலில் படி
வெடிபட்டிட வரும் - முழங்குகின்ற ஒலியால் நிலவுலகம் பிளக்கும்படி
வாரா நின்றது.
தெருளறுதலும்
மறையிற்ப்டர் செயலறுதலும் இகபர மெய்ப்
பொருளறுதலுக்குக் காரணமாயின. மெய்ப்பொருள் - நிலையாகிய
வீடு பேறு. இடிகுரல் : வினைத்தொகை, ஆல் : அசை. (16)
அடியின்னள வகல்பாதல முடியின்னள வண்டம்
இடியின்னள வெழுகார்செவி யெறிகாலள வகிலம்
மடியும்மள வுளர்கான்மத மழையின்னள வுலக
முடிவின்னெழு கடல்கண்ணழ லளவாமுது வடவை.
|
(இ
- ள்.) அடியின் அளவு அகல் பாதலம் - அந்த யானையின்
அடிகளின் எல்லை அகன்ற பாதலமாகும்; முடியின் அளவுஅண்டம் -
முடியின் எல்ல வானுலகமாகும்; இடியின் அளவு எழுகார் - முழக்கத்தின்
எல்லை எழுமேகங்களின் ஓசையாகும்; செவி எறிகால் அளவு அகிலம்
மடியும் இளவு உளர் கால் - காதுகள் வீசும் காற்றின் எல்லை உலக
முழுதும் அழியுங் காலத்தில் வீசும் ஊழிக் காற்றாகம்; மதமழையின் அளவு
உலக முடிவின் எழுகடல் - மதமாகிய மழையின் எல்லை உலகம்
முடியுங்காலத்திற் பொங்கி யெழும் எழுகடலாகும்; கண் அழல் அளவு முது
வடவை ஆம் - விழிகள் சிந்தும் வெகுளித்தீயின் எல்லை பெரிதாகிய
வடவைத்தீயாகும்.
இறுதியிலுள்ள
ஆம் என்பதனைப் பாதலம் முதலியவற்றோடு கூட்டுக.
ஓசையின் பொருட்டு னகர மகர வொற்றுக்கள் விரிந்து நின்றன. (17)
கூற்றஞ்சிய* வருமிக்கரி குரலஞ்செவி முழைவாய்
ஏற்றஞ்செய மடங்குஞ்செவி யெறிகால்வழி விழித்தீ
ஊற்றஞ்செய மடைவாயுடைந் தொழுகுங்கட மதநீர்
நாற்றஞ்செயத் திசைவேழமு நடுக்கஞசெய்து நலியும். |
(இ
- ள்.) கூற்று அஞ்சிய வரும் இக்கரி - கூற்றுவனும் அஞ்சு மாறு
வருகின்ற இந்த யானை, குரல் அஞ்செவி முழைவாய் ஏற்றம் செய - தனது
முழக்கம் அஞ் செவியாகிய முழையின் கண்ணே சென்று தாக்கவும்,
மடங்கும் செவி எறிகால் வழி விழித்தீ ஊற்றம் செய - மடங்கிய செவிகள்
வீசுகின்ற காற்றின் வழியே விழியின் தீமூண்டு சென்று ஊறு செய்யவும்,
மடைவாய் உடைந்து ஒழுகும் கடமத நீர் நாற்றம் செய - மடை வாய்
உடைந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கு நாறுதலைச் செய்யவும், திசைவேழமும்
|