நடுக்கஞ்செய்து நலியும்
- (இவற்றால்) திக்கு யானைகளையும் நடுங்கச்செய்து
வருத்தும்.
அஞ்சிய
: செய்யிய வென்னும் வினையெச்சம். கரியானது திசை
வேழங்களையும் நடுக்கஞ் செய்து நலியும் என்க. திசைவேழங்களின்
செவியாகிய முழை. (18)
இடிக்கும்புயல் வயிற்றைக்கிழித் திடியேற்றினை யுதிர்க்கும்
வெடிக்கும்பிளி றொலியாற்றிசை விழுங்கிச்செவி டாக்குந்
துடிக்கும்புழைக் கையோச்சிவிண் டொடுகுன்றினைச் சுற்றிப்
பிடிக்குங்கடல் கலக்குந்தனிப் பெருமத்தெனத் திரிக்கும். |
(இ
- ள்.) இடிக்கும் புயல் வயிற்றைக் கிழித்து இடி ஏற்றினை
உதிர்க்கும் - இடிக்கின்ற முகிலின் அகட்டினைக் கீண்டு இடியேற்றை
உதிர்க்கா நிற்கும்; வெடிக்கும் பிளிறு ஒலியால் திசை விழுங்கிச் செவி
டாக்கும் - முழங்குகின்ற் பியிறுதலின் ஒசையினால் திசைகளை விழுங்கிச்
செவிடாக்கும்; துடிக்கும் புழைக்கை ஒச்சி - துடிக்கா நின்ற தொளைக்
கையை வீசி, விண்தொடு குன்றினைச் சுற்றிப் பிடிக்கும் - வானை
யளாவிய மலகளைச் சுற்றிப் பிடிக்கும்; கடல் கலக்கும் தனிப்
பெருமத்தெனத் திரிக்கும் - (அம்மலைகளைக்) கடலைக் கலக்குகின்ற
ஒப்பற்ற பெரிய மத்தாகிய மந்தர மலையைப் போலச் சுழற்றா நிற்கும்.
யானை
முழங்குதல் பிளிறுதலெனப்படும். விழுங்கி - அகப்படுத்தி.
அவற்றைத் திரிக்கும் என விரித்துரைக்க. (19)
உருமுக்குர லொலியிற்றுள ரொலிவிட்டேறி செவியிற்
றிருமுட்பிறை யெயிற்றழ* லெரிகடடிரு ளுடலிற்
றருமுக்கட வருவித்துர லடியிற்றிறென நிலமேல்
வருமுக்கிர வடவைக்கனல் வரினொப்பத மதமா.
|
(இ
- ள்.) உருமுக் குரல் ஒலியிற்று - இடிபோன்ற முழக்கத்தினை
யுடையது; உளர் ஒலி விட்டெறி செவியிற்று - சூறைக்காற்றினைவிட்டு வீசும்
செவியினையுடையது; இருமுள் பிறை எயிறிற்று - இரண்டு முட்போலும்
முனையையுடைய பிறை போன்ற மருப்புக்களையுடையது; அழல் எரி கட்டு -
வெகுளித்தீ எரிகின்ற கண்களையுடையது; இருள் உடலிற்று - இருள் போன்ற
உடலினையுடையது; அரு முக்கட அருவித்து - அரிய மூன்று மதங்களாகிய
அருவியையுடையது; அரல் அடியிற்று - உரல் போன்ற அடியினையுடையது;
அ மதமா - அந்த மதயானையானது, உக்கிர வடவைக்கனல் வரின் ஒப்பது
என - கொடுமையுடைய வடவைத்தீயானது நடந்துவரின் அதனை ஒப்பதாம்
என்னுமாறு, நிலமமேல் வரும் - புவியின்மேல் வராநின்றது.
ஒலியிற்று
என்பது முதலியன குறிப்பு வினைமுற்றுக்கள். உள ரொலி
என்பதில் ஒலி காற்று என்னும் பொருளது. உளர்தல் - வீசுதல். எயிற்றிற்று
(பா
- ம்.) * அழலெறி.
|