தனித்தனி பெருமையுடையது
என்றால், பிறிது ஒரு பதியாது என்றான் -
அதனை யொப்பதாகிய வேறொரு பதி யாதுளது என்றான்.
பாரிடத்து
வேறு பதி இல்லை என்றும், அதனையொப்பதாகிய
பிறிதொரு பதி என்றும், விரித்துரைக்க. (7)
இம்மது ரேசன் சேவித் தேத்துவோர்க் கெளிய னாகிக்
கைம்மலர் நெல்லி போலக் கருதிய வரங்க ளெல்லாம்
இம்மையி னுடனே நல்கு மேனைய தலத்து வானோர்
அம்மையி னன்றி நல்கா ராதலா லதிக* மென்றான். |
(இ
- ள்.) இம் மதுரேசன் சேவித்து ஏத்துவோர்க்கு - இந்த மதுரை
நாயகனாகிய சோம சுந்தரக் கடவுள் தன்னை வணங்கித் துதித்போர்க்கு,
கைம்மலர் நெல்லி போல எளியனாகி - கையாகிய மலரின்கண் உள்ள
நெல்லிக்கனியின் தோற்றம் போல் எளிமையுடையவனாய்த் தோன்றி, கருதிய
வரங்கள் எல்லாம் - அவர் கருதியவரங்கள் அனைத்தையும், இம்மையின்
உடனே நல்கும் - இப்பிறப்பிலே உடன் தந்தருளுவன்; ஏனைய தலத்து
வானோர் - மற்றைய தலத்துக் கடவுளர், அம்மையின் அன்றி நல்கார் - மறு
பிறப்பிலன்றி இப்பிறப்பில் நல்கார்; ஆதலால் அதிகம் என்றான் -
ஆகையால் சோம சுந்தரக் கடவுளே மேன்மையுடைய மூர்த்தியாகும் என்று
கூறினான்.
நன்கு
விளங்குவதென்பதற்கு எடுத்துக்காட்டாக ஆன்றோரால் நிறுவப்
பெற்று வழங்கி வருவதொரு வசனம் 'உள்ளங்கை நெல்லிக் கனி' என்பது.
இது 'கரதலாமலகம்' என வடமொழியிற் கூறப்படும்.
"தடக்கையின்
நெல்லிக் கனியெனக் காயினன்" |
என்னும் திருவாசகம்
இங்கே சிந்திக்கற்பாலது. வரங்களெல்லாம் கைம்மலர்
நெல்லிபோல நல்கும் என இயைத்துரைத்தலும் பொருந்தும். (8)
மற்றது கேட்டுக் கொம்பர் வைகிய கயவாய் ஞானம்
பெற்றது பறவை யாகிப் பிறந்ததும் பிறவுந் தேற்றம்
உற்றது நாமிச் சன்ம மொழிப்பதற் கறவோ னிங்ஙன்
சொற்றதே யுறுதி யென்று துணிவுகொ டெழுந்த தன்றே. |
(இ
- ள்.) கொம்பர் வைகிய கயவாய் - அம்மரக்கிளையிற்
சாம்பியிருந்த கரிக்குருவி, அது கேட்டு ஞானம் பெற்றது - அவன் கூறியதைக் கேட்டலால்
ஞானத்தைப் பெற்றது; பறவையாகிப் பிறந்ததும் பிறவும் தேற்றம்
உற்றது - (அதனால்) தான் பறவையாய்ப் பிறந்த காரணமும் பிறவும்
தெளிந்தது; இச்சன்மம் நாம் ஒழிப்பதற்கு - இக் கொடிய பிறவியை நாம்
ஒழிப்பதற்கு, இங்ஙன் அறவோன் சொற்றதே உறுதி என்று - இங்கு
(பா
- ம்.) * அதிகன்.
|