இவ்விரத வொழுக்கினன்
கூறியதே உறுதியாவதென்று கருதி, துணிவு கொடு
எழுந்தது - துணிந்து எழுந்தது.
ஞானம்
- மூன்று காலமும் அறியும் அறிவு. கொம்பர் : ஈற்றுப் போலி.
மற்று, அன்று, ஏ : அசைகள். அன்றே என்பதற்கு அப்பொழுதே
என்றுரைத்தலும் ஆம். (9)
ஆய்மலர்க் கான நீங்கி யாடக மாடக் கூடற்
போய்மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனறோய்ந் தாம்பல்
வாய்மலர்க் கயலுண் கண்ணாண் மணாளனை வலஞ்செய் தன்பிற்
றோய்மலர்க் கழலி னானை யகத்தினாற் றொழுதர்ச் சித்தே. |
(இ
- ள்.) ஆய் மலர்க்கானம் நீங்கி - வண்டுகளாராயுந் தேனை
யுடைய மலர்கள் நிறைந்த காட்டை நீங்கி, ஆடகமாடக் கூடல் போய் -
பொன்னாலாகிய மாடங்கள் நிறைந்த மதுரைப்பதியிற் சென்று, மலர்க் கனக
கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து - மலர்களையுடைய பொற்றாமரையின்
புண்ணிய நீரில் மூழ்கி, ஆம்பல் மலர்வாய் - ஆபல் போன்ற
திருவாயினையும், கயல் உண்கண்ணாள் - கயல் போன்ற மையுண்ட
கண்களையுமுடைய உமையம்மையின், மணாளனை வலம் செய்து -
நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை வலஞ் செய்து, அன்பில் தோய்மலர்க்
கழலினானை - அன்பாகிய நீரிற்றோயும் தாமரை மலர் போன்ற
திருவடிகளையுடைய அவ்விறைவனை, அகத்தினால் தொழுது அர்ச்சித்து -
மனத்தினால் வணங்கிப் பூசித்து.
ஆய்மலர்
என்பதற்கு மெல்லிய மலர் என்றும் அழகிய மலர் என்றும்
உரைத்தலுமாம். (10)
இன்னண மூன்று வைகல் கழிந்தபி னெம்பி ராட்டி
தன்னமர் காத லானைத் தாழ்ந்தெதிர் நோக்கி யைய
என்னையிக் கயவாய் செய்யுஞ் செயலிதன் வரவியா தென்ன
முன்னவ னதன்றன் செய்தி வரவெலா முறையாற் கூறா. |
(இ
- ள்.) இன்னணம் மூன்று வைகல் கழிந்த பின் - இங்ஙனம் மூன்று
நாட்கள் சென்ற பின், எம்பிராட்டி - எம் பிராட்டியார், தன் அமர்
காதலானைத் தாழ்ந்து - தம்மால் விரும்பப்பட்ட காதலராகிய சோம சுந்தரக்
கடவுளை வணங்கி, எதிர்நோக்கி - நேரே பார்த்து, ஐய - ஐயனே,
இக்கயவாய் செய்யும் செயல் என்னை - இக்கரிக்குருவி செய்யும் வழிபாடு
எதன் பொருட்டு, இதன் வரவு யாது என்ன - இதன் வரலாறு என்னை என்று
வினவ, முன்னவன் - இறைவன், அதன் செய்தி வரவு எலாம் முறையால் கூறா
- அதனது செய்தியும் வரலாறுமாகிய அனைத்தையும் முறைப்படி கூறி.
வரவியாது
என்புழி இகரம் குறுகி நின்றது. அதன்றன், தன் : சாரியை.
(11)
|