பத்திமை நியமம் பூண்ட பறவைமேற் கருணை நாட்டம்
வைத்திமை யாத முக்கண் மறைமுத லொருசேய்க் கன்று
நித்திய நிலைமை நல்கி நேர்ந்தவெங் கூற்றைக் காய்ந்த
சத்திய ஞான மிர்த்திஞ் சய*த்தினை யுபதே சித்தான். |
(இ
- ள்.) இமையாத முக்கண் மறை முதல் - இமையாத மூன்று
கண்களையுடைய வேத முதல்வனாகிய அச் சோம சுந்தரக் கடவுள்,
பத்திமை நியமம் பூண்ட பறவை மேல் - அன்பு செய்தலையே கடப்
பாடாகக் கொண்ட அப் பறவையின் மேல், கருணை நாட்டம் வைத்து -
அருள் நோக்கம் வைத்து, ஒரு சேய்க்கு - ஒரு மாணியாகிய
மார்க்கண்டனுக்கு, அன்று - அந்நாளில், நித்திய நிலைமை நல்கி -
அழிவற்ற தன்மையைக் கொடுத்து, நேர்ந்த வெங்கூற்றைக் காய்ந்த -
எதிர்த்த கொடிய கூற்றுவனை ஒறுத்த, சத்திய ஞான மிர்த்திஞ்சயத்தினை
- உண்மை ஞானமாகிய மிர்த்திஞ்சய மனுவை, உபதேசித்தான் -
உபதேசித்தருளினான்.
மிர்த்திஞ்சயம்
- மூன்றெழுத்தான் முடிந்ததொரு வேத மந்திரம். (12)
[கலிவிருத்தம்]
|
உவமை
யற்றவ னுரைத்த மந்திரஞ்
செவிம டுத்தலுஞ் சிற்று ணர்ச்சிபோய்ப்
பவம கற்றிடப் படுக ரிக்குரீஇ
கவலை விட்டரன் கழல்வ ழுத்துமால். |
(இ
- ள்.) உவமை அற்றவன் - ஒப்பற்றவனாகிய இறைவன், உரைத்த
மந்திரம் செவிமடுத்தலும் - உபதேசித்தருளிய அம்மனுவைக் காதிற்
கேட்டவளவில், சிற்றுணர்ச்சி போய் - சிற்றறறிவு நீங்கி, பவம் அகற்றிடப்படு
கரிக்குரீஇ - பிறவி நீங்கப் பெற்ற அக்கயவாய், கவலை விட்டு -
துன்பமொழிந்து, அரன் கழல் வழுத்தும் - அவ்விறைவன் திருவடிகளைத்
துதிக்கும்.
அகற்றிடப்படு
- நீக்கப்பட்ட; நீக்கிய. குரீஇ : இயற்கையளபெடை.
ஆல் : அசை. (13)
எண்ணி லாவுயிர்க் கிறைவ போற்றிவான்
தண்ணி லாமதிச் சடில போற்றியென்
புண்ணி யப்பயன் போற்றி யங்கயற்
கண்ணி நாதநின் கருணை போற்றியால். |
(இ
- ள்.) எண் இலா உயிர்க்கு இறைவ போற்றி - அளவிறந்த
உயிர்களுக்குத் தலைவனே வணக்கம்; வான்தண் நிலாமதிச்சடில போற்றி -
வானின்கண் உலாவும் குளிர்ந்த நிலாவையுடைய சந்திரனைத் தரித்த
சடையையுடையானே வணக்கம்; என் புண்ணியப் பயன் போற்றி - எனது
(பா
- ம்.) * மித்திஞ்சயம்.
|