II


கரிக்குருவிக் குபதேசஞ்செய்த படலம்495



யீடின்றிப் பயின்று அச்சத்தையும் துன்பத்தையும் ஒழிக்கவும், கருணை
செய்க என - அருள் செய்வாயாக என்று வேண்ட.

     நாம் - அச்சம்; யாங்கள் என்றுமாம். செய்கென : அகரம் தொகுத்தல் :
(19)

ஆவ தாகவென் றமரர் நாயகன்
மூவெ ழுத்தினான் முடிந்த வம்மனு
தாவி றெய்வத மிருடி சந்தமோ
டோவி லோசைமூன் றொடுதெ ருட்டினான்.

     (இ - ள்.) அமரர் நாயகன் - தேவர் தேவனாகிய இறைவன், ஆவதாக
என்று - அங்ஙனமே ஆகக் கடவது என்று கூறியருளி, மூவெழுத்தினால்
முடிந்த அம்மனு - மூன்று எழுத்தினால் முடிந்த அம்மந்திரத்தை, தாவு இல்
தெய்வதம் இருடி சந்தமொடு - கெடுதலில்லாத தெய்வம் முனி பண்
என்பவற்றோடும், ஓவு இல் ஓசை மூன்றொடு தெருட்டினான் - நீங்குதலில்லாத எடுத்தல் முதலிய மூன்று ஓசையோடும் தெளிவுறுத்தான்.

     மனு - மந்திரம். இம்மந்திரத்தைத் திரியம்பகம் என்றும் கூறுவர்.
ஒவ்வொரு மந்திரத்திற்கும் தெய்வமும் இருடியும் சந்தமும் உண்டாகையால்
இதனை அவற்றோடு தெளிவித்தார் என்க. ஓசை மூன்று - எடுத்தல் படுத்தல்
நலிதல்; இவை வடமொழியில் உதாத்தம் அநுதாத்தம் சொரிதம் என்று
கூறப்படும். (20)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
குருமொழி பயின்று முள்வாய்க் குருவிதன் குலனுந் தன்போல்
அருமறை முதல்வ னீந்த வாற்றலாற் பறவைக் கெல்லாம்
பெருமைசால் வலியா னென்னும் பெயரவா யுலகின் மன்னக்
கருமணி கண்டன் செம்பொற் கனைகழ லடிசேர்ந் தன்றே.

     (இ - ள்.) முள்வாய்க் குருவி - முள் போலக் கூரிய வாயையுடைய
அக்கரிக் குருவி, குருமொழி பயின்று - குரவன் உபதேச மொழியை
இடைவிடாது பயின்று, தன் குலனும் - தனது சாதிப் பறவைகளும், தன்
போல் - தன்னைப் போலவே, அருமறை முதல்வன் ஈந்த ஆற்றலால் -
அரிய வேத முதல்வனாகிய சோம சுந்தரக் கடவுளருளிய வலியால்,
பறவைக்கு எல்லாம் - பறவைகள் அனைத்திற்கும், பெருமை சால் வலியான்
என்னும் பெயரவாய் - பெருமைமிக்க (வலியையுடைமையால்)
வலியானென்னும் பெயரினையுடையவாய், உலகின் மன்ன - உலகிலே நிலை
பெற்றிருக, கருமணி கண்டன் - நீலமணி போலுந் திருமிடற்றையுடைய
அவ்விறைவனது, செம்பொன் கனை கழல் அடிசேர்ந்தன்று - சிவந்த
பொன்னாலாகிய ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடியைச் சேர்ந்தது.

     ஒரு குருவியும் இத்தகைய பெறற்கருபேற்றினை எய்திற்றென
வியப்பாராய் 'முள்வாய்க் குருவி' என்றார். முதல்வன் ஈந்த அருமறை