II


50திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என்பது விகாரமாயிற்று, மதமா கனல்வரின் ஒப்பது என நிலமேல்வரும்
எனக்கூட்டி முடிக்க. அம்மதமா என்பதில் மகரந் தொக்கது. (20)

தெழிபட்டதிக்* கயத்தின்செவி தீயப்பகை யோடும்
வழிபட்டொரு கடுங்கூற்றென வருகுஞ்சர வரவை
விழிபடடவர் மொழியாலுணர் விரைபட்டலர் வேம்பன்
சுழிபட்டலை புனல்போன்மனஞ் சுழன்றானினைந் தழன்றான்.

     (இ - ள்.) தெழிபட்ட திக்கயத்தின் செவி தீய - முழக்கந் தாக்கிய
திசையானைகளின் செவிகள் கருக, பகையொடும் வழிபட்டு ஒரு கடுங் கூற்று
என வரு குஞ்சர வரவை - பகைமையுடன் வழிக்கொண்டு ஒரு கொடிய
கூற்றுகூன்போல வருகின்ற யானையின் வரவினை, விழி பட்டவர் மொழியால்
உணர் - கண்ணுற்றவர்களின் மொழியா லுணர்ந்த, விரைபட்ட அலர்
வேம்பன் - மணம் பொருந்திய மலர்ந்த வேப்ப மலர் மாலையை யணிந்த
விக்கிரம பாண்டியன், சுழிபட்டு அலை புனல்போல் மனம் சுழன்றான் -
சுழித்தல் கொண்டு அலைகின்ற நீர் போல மனஞ் சுழன்றான், நினைந்து
அழன்றான் - எண்ணி வெதும்பினான்.

     தெழி என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஓசைக்காயிற்று, தெழித்தல்
- உரப்புதல், ஆர்த்தல். பகை - பகைவராகிய சமணருமாம். விழிபட்டவர் -
கண்டவர். உணர் வேம்பன் என்க. சுழன்றாக், அழன்றான் என்பனவற்றை
எச்சமாக்கலுமாம். (21)

மைப்போதகம் பொறையாற்றிய மணிக்கோயின்முன் குறுகாக்
கைப்போதக முரித்தான்கழற் காற்போதக முறத்தாழ்ந்
திப்போதகந் தனையுந்தொலைத் தெனைக்காத்தியென் றிரந்தான்
அப்போதகல் வானின்றொரு திருவாக்கெழுந் தன்றே.

     (இ - ள்.) மை போதகம் பொறை ஆற்றிய மணிக்கோயில் முன்
குறுகா - கரிய யானைகளாற் சுமக்கப்பட்ட மணிகள் அழுத்திய இந்திர
விமானத்தின் முன் சென்று, கை போதகம் உரித்தான் கழல் கால் போது
அகம் உறத் தாழ்ந்து - துதிக்கையனையுடைய யானையை உரித்தருளிய
சோமசுந்தரக் கடவுளின் வீரக்கழலணிந்த திருவடி மலர்களை மனமுற
வணங்கி, இப்போதகம் தனையும் தொலைத்து எனைக்காத்தி என்று
இரந்தான் - இந்த யானையையும் கொன்று அடியேனைக் காத்தருள்க
என்று குறையிரந்தான்; அப்போது அகல் வான் நின்று ஒரு திருவாக்கு
எழுந்தன்று - அப்பொழுது அகன்ற விசும்பினின்றும் ஒரு திருவாக்கு
எழுந்தது.

     பொறை ஆற்றிய - பொறுத்தலைச் செய்த. முன்னொரு காலத்தில்
யானையை உரித்த பெருமானே இந்த யானையையும் கொன்று அருள
வல்லன் என்பார் ‘கைப்போதக முரித்தான் கழற்காற்போதக முறத் தாழ்ந்து’
என்றார். தன் தந்தையின் காலத்தில் வருணன் விட்ட கடலையும் முகிலையும்
தொலைத்தமைபோல இந்த யானையையும் தொலைக்கவேண்டு மென்பது


     (பா - ம்.) * தெழிப்பட்ட வழிப்பட்டொரு. விழிப்பட்டவர்,
சுழிலைப்பட்டலை.