முருக்கும் நீண்ட மருதும்
முதலாக, உரை செய் பல்மரமும் - சொல்லப்பட்ட
பல மரங்களும், புறத்து உள்ள - (அவ்வாவியின்) புறத்திலுள்ளன.
தேன்
- வண்டு. இரை, முதனிலைத் தொழிற் பெயர். (8)
அந்த வாவியின் பேரச்சோ தீர்த்த*மென்
றிந்த ஞால மியம்புவ தாலிரை
உந்த வாவுகொ டூக்க+வெழுந்துமுன்
வந்த நாரை யதன்கரை வைகுமால். |
(இ
- ள்.) அந்த வாவியின் பேர் அச்சோ தீர்த்தம் என்று - அந்த
ஓடையின் பெயர் அச்சோ தீர்த்தமென்று. இந்த ஞாலம் இயம்புவது -
இந்நிலவுலகத்தாராற் கூறப்படுவது; இரை உந்து அவாவு கொடு ஊக்க -
உணவில் மீதூர்ந்து எழுந்த விருப்பம் தன்னைப் பற்றிச் செலுத்த, எழுந்து
முன் வந்த நாரை - புறப்பட்டு அவ்வாவியின் முன் வந்த நாரை, அதன்
கரை வைகும் - அதன் கரையின்கண் தங்கா நின்றது. அவாவு, உ :
சாரியை. (9)
ஆய்ந்த மாதவ
ரப்புனி தத்தடந்
தோய்ந்து தோய்ந்தங் கெழுந்தொறுந் தோட்புறஞ்
சாய்ந்த வார்சடைக் கற்றையிற் றத்துமீன்
பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்தரோ. |
(இ
- ள்.) ஆய்ந்த மாதவர் - உண்மைப் பொருளை ஆராய்ந்துணர்ந்த
பெரிய முனிவர், அப்புனிதத்தடம் தோய்ந்து தோய்ந்து - அத்தூய வாவியின்
கண் மூழ்கி மூழ்கி, எழுந்தொறும் - மேலே எழுந்தொறும், தோட்புறம்
சாய்ந்த வார் சடைக்கற்றையில் - பிடரிலே சாய்ந்து கிடக்கும் நீண்ட
சடைத்திரளில், தத்தும் மீன் பாய்ந்து பாய்ந்து புரள்வன பார்த்து - குதிக்கின்ற
மீன்கள் பாய்ந்து பாய்ந்து புரளுதலைப் பார்த்து.
அடுக்குகள்
பன்மை குறித்தன. அங்கு அரோ, என்பன அசை
நிலைகள்.(10)
ஈண்டை யித்தவத் தோர்திரு மேனியைத்
தீண்ட வெத்தவஞ் செய்தன வேகொலென்
றாண்டை மீனமக் காகா வெனவிரை
வேண்டு நாரை வெறுத்தங் கிருந்ததால்.+ |
(இ
- ள்.) ஈண்டை இத்தவத்தோர் திருமேனியை - இங்கு இந்த
முனிவர்கள் திருமேனியை, தீண்ட - தொடுதற்கு, எத்தவம் செய்தனவே
கொல் என்று - (இந்த மீன்கள்) எத்துணைத் தவம் புரிந்தனவோ என்று
கருதி, ஆண்டை மீன் நமக்கு ஆகா என - (அங்ஙனம் தவம் புரிந்து)
(பா
- ம்.) * அதோ தீர்த்தம். +கொடுக்க. முந்தவாவு முடுக்க.
+இறுத்ததால்.
|