கூறக்கடவாய் என்று கூறியருளினான்.
இறைவன்
தேவரும் மறையும் செய்யும் வந்தனைக்கு அரியனாயும்
இந்நாரைக்கு எளிவந்தனன் என வியந்து கூறினார் என்க. நினை - சிந்தித்த;
தியானித்த. கொல் : அசை. இயம்புக என்பதன் அகரம் தொக்கது. (18)
[கலிநிலைத்துறை]
|
செய்ய
கான்மட நாரையுஞ் சென்றுதாழ்ந்
தைய னேயிப் பிறவி யறுத்துநின்
மெய்யர் வாழ்சிவ லோகத்தின் மேவிநான்
உய்ய வேண்டுமொன் றின்னமு முண்டரோ. |
(இ
- ள்.) செய்யகால் மட நாரையும் - சிவந்த தாளையுடைய
அவ்விள நாரையும், சென்று தாழ்ந்து - திரு முன்சென்று வீழ்ந்து வணங்கி,
ஐயனே இப்பிறபி அறுத்து - ஐயனே இக்கொடிய பிறவியைப் போக்கி, நான்
- அடியேன், நின் மெய்யர் வாழ் சிவலோகத்தின் மேவி - நினது உண்மை
அன்பர்கள் வாழுஞ் சிவலோகத்திற் சென்று, உய்ய வேண்டும் - பிழைக்க
வேண்டும்; இன்னனம் ஒன்று உண்டு - இன்னமும் வேண்டும் வரம் ஒன்று
உள்ள.
"வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை" |
என்பது மறையாகலின்
முதற்கண் பிறவியறுத்தல் கூறிற்று. அரோ :
அசை. (19)
வள்ள லென்மர
புள்ளவு மற்றைய
புள்ளு மிந்தப் புனித மலர்த்தடத்
துள்ள மீனுயி ருண்ணினெக் காலமும்
தள்ளொ ணாத பழிவந்து சாருமால். |
(இ
- ள்.) வள்ளல் - கருணை வள்ளலே, என் மரபு உள்ளவும்
மற்றைய புள்ளும் - எனது மரபில் உள்ளனவும் : மற்றையவுமான பறவைகள்,
இந்தப் புனித மலர்த்தடத்து உள்ள - இந்த மலர் நிறைந்த தூய
வாவியிலுள்ள, மீன் உயிர் உண்ணின் - மீன்களின் உயிரை உண்டால்,
எக்காலமும் - எஞ்ஞான்றும், தள்ளொணாத பழி வந்து சாரும் - நீக்க
முடியாத பாவம் வந்து (அவற்றைச்) சேரும் (ஆதலால்.) மற்றையவுமாகிய புள்
என உம்மையை மாறுக. ஆல் : அசை. (20)
என்று மித்தட
மீனில வாகநீ
நன்று சால்வர நல்கென வெள்ளிமா
மன்று ளானும் வரந்தந்து போயினான்
சென்று நாரை சிவலோகஞ் சேர்ந்ததால். |
|