தோன்ற நின்றமையின்
இப்போதகந் தனையும் என்பதிலுள்ளஉம்மை
இறந்தது தழுவிய எச்சப்பொருட்டு; முன் யானை உரித்தமையைத் தழுவி
நின்றதுமாம். எழுந்தன்று - எழுந்தது; அன் : சாரியை ஏ : அசை... (22.)
விட்டார்வலி
கெடநாமொரு விற்சேவக னாகி
ஒட்டார்விட வருவெங்கரி யுயிர்வௌவுது முதனின்
மட்டார்பொழிற் கடிமாநக ரயற்கீட்டிசை மருங்கோர்
அட்டாலைமண் டபஞ்செய்யென வதுகேட்டெழுந் தரசன். |
(இ
- ள்.) விட்டார் வலிகெட - விடுத்தவர்களின் மனவன்மை
கெடுமாறு, நாம் ஒரு வில் சேவகன் ஆகி - நாம் ஒரு விற்பிடித்த
சேவகனாய் (வந்து). ஒட்டார் விடவரு வெங்கரி உயிர் வௌவுதும் -
பகைவர்விட வருகின்ற கொடிய யானையின் உயிரைக் கவருவேம்; முதல் -
முதலில், நின் மட்டு ஆர் பொழில் கடிமாநகர் அயல் கீழ் திசை மருங்கு -
உனது தேன் நிறைந்த சோலை சூழ்ந்த காவலையுடைய பெரிய நகரத்தினரு
கிலே கீழ்த்திசையில், ஓர் அட்டாலை மண்டபம் செய்என - ஓர் அட்டாலை மண்டபம்
செய்வாய் என்று அவ்வாக்கு அருள, அது கேட்டு அரசன்
எழுந்து - அதனைக் கேட்டு அரசன் எழுந்து.
முதல்
- முன்பு. கீழ்த்திசை என்பது மருவிற்று. அட்டாலை -
விலங்குகளை வேட்டமாடுவார் ஏறியிருக்கும் பரண். அட்டாலை மண்டபம்
- பரண் வடிவாக இயற்றிய மண்டபம். செய்யென எழுந்தன்று என மேற்
செய்யுளோடு கூட்டி முடித்தலுமாம். (23)
அகங்கவ்விய
களிப்பெய்திவந் தட்டாலைமண் டபம்பொன்
நகங்கவ்விய தெனத்தூணொரு நானான்கினி லெடுத்தே
சகங்கவ்விய புகழான்செயத் தறுகட்கணை மதமா
முகங்கவ்விய விற்சேகவன் வருவானது மொழிவாம். |
(இ
- ள்.) அகம் கவ்விய களிப்பு எய்திவந்து - உள்ளத்தை
விழுங்கிய மகிழ்ச்சியை அடைந்துவந்து, அட்டாலை மண்டபம் -
அட்டாலை மண்டப மொன்றை, பொன் நகம் கவ்வியது எனத் தூண்
ஒருநால் நான்கினில் எடுத்து - பொன் மலையே உருமாறிச் சுமக்கின்றது
என்று கண்டோர் சொல்லப் பதினாறு தூண்கள் சுமக்குமாறு எடுத்து,
சகம் கவ்விய புகழான்செய - உலகத்தைத் தனதகப்படுத்திய புகழையுடைய
விக்கிரம பாண்டியன் கட்டி முடிக்க, தறுகண் கணை மதமா முகம் கவ்விய
வில் சேவகன் வருவான் - (சோமசுந்தரக் கடவுள்) கொலைத்
தொழிலையுடைய அம்பானது அம்மத யானையின் முகத்திலே தைத்துருவ
வில்லை யேந்திய சேவகனாகி வாராநின்றான்; அது மொழிவாம் - அதனைக்
கூறுவாம்.
புகழானாகிய
அரசன் என மேற்செய்யுளோடு இயைத்துரைக்க.
தறுகண்மையுடைய மதமாவின் முகத்தைக் கணை கவ்விய
என்றுரைத் தலுமாம். கவ்விய வருவான் என்க; கவ்விய : செய்யிய
வென்னும் வினையெச்சம். அது - அங்ஙனம் வருந் தோற்றத்தை. (24)
|