அஞ்சுகூ விளிச்சேய்த் தென்ன வதுவர வறனி லாதான்
வெஞ்சினக் கோலினோன்றாண் மிதித்துமெய் குழைய வாங்கிச்
செஞ்சிலை நெடுநாண் பூட்டித் திருவிர றெறித்துத் தாக்கிக்
குஞ்சர மெட்டு மஞ்சக் கோளரி முழக்கங் காட்டி.
|
(இ
- ள்.) அஞ்சு கூவிளி சேய்த்து என்ன அதுவர - கூப்பிடு தூரம்
என்று சொல்லுமாறு அந்த யானையானது வர, அறன் இலா தான் வெஞ்சினக்
கோலின் - அறநெறியில்லாத அச்சோழனது கொடிய சினத்தினையுடைய
கொடுங்கோலைப்போல, செஞ்சிலை நோன்தாள் மிதித்து மெய்குழைய வாங்கி
- செவ்வையாகிய வில்லைத் தனது வலிய தாளால் மிதித்து உடல் வளைய
(அதனை) வளைத்து, நெடுநாண் பூட்டி - நீண்ட நாணைப் பூட்டி, திருவிரல்
தெறித்துத் தாக்கி - அழகிய விரலாலே தெறித்துக் குணத்தொனி செய்து,
குஞ்சரம் எட்டும் அஞ்சக் கோளரி முழக்கம் காட்டி - திசை யானைகள்
எட்டும் அஞ்சுமாறு சிங்கத்தொனியைக் காட்டி.
கூவிளி
- கூப்பீடு. அறன் நிலாதான் எனப் பிரித்ததுமாம். உடையானது
சினத்தைக் கோலுக்கேற்றினார். கோல்போல வளைய வளைத்தென்க.
தெறித்துக் தாக்கி - தெறித்து நாணொலி எழுப்பி; குணத்தொனி செய்து,
வருகின்ற யானையேயன்றித் திசை யானைகளும் அஞ்ச. கோளரிமுழக்கம் -
சிங்கநாதம். (29)
இங்கித நெடுங்கோ தண்ட மிடங்கையி லெடுத்து நார
சிங்கவெங் கணைதொட் டாகந் திருகமுன் னிடத்தாள் செல்ல
அங்குலி யிரண்டா லையன் செவியுற வலித்து விட்டான்
மங்கலின் முழங்கும் வேழ மத்தகங் கிழிந்த தன்றே. |
(இ
- ள்.) இங்கித நெடுங் கோதண்டம் இடங்கையில் எடுத்து - இனிய
நெடிய வில்லை இடக்கையிலெடுத்து, நாரசிங்க வெங்கணை தொட்டு -
கொடிய நாரசிங்கக் கணையைப் பூட்டி, ஆகம் திருக இடத்தாள் முன்செல்ல
-தனது உடல் திருகவும் இடக்கால் முன்னே செல்லவும், ஐயன் - இறைவன்,
அங்குலி இரண்டால் செவி உற வலித்துவிட்டான் - இணை்டு விரல்களால்
செவி வரையிலும் இழுத்து விட்டான்; மங்குலின் முழங்கும் வேழ மத்தகம்
கிழிந்தது - (அக்கணை யினால்) முகில் போல முழங்கிவந்த
அவ்வியானையின் மத்தகம் பிளந்தது.
இங்கிதம்
- இனிமை; குறிப்புமாம். இடங்கை, மெலித்தல் விகாரம். முன்
இடத்தாள் செல்ல என்றமையால் வலத்தாள் மண்ட லித்தலுங் கொள்க; இது
பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என்னும் வில்லோா
நிலைகளுள் ஆலீடம் எனப்படும். அங்குலி - விரல். விரைவு தோன்ற
விட்டான், கிழிந்தது என்றார். அன்று, ஏ : அசைகள். (30)
கொண்டலி
னலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாருஞ் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலு மென்னத் துண்ணென வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசைமால் யானை |
|