II


யானையெய்த படலம்55



     (இ - ள்.) கொடிய வேழம் கொண்டலின் அலறிச்சீறி வீழ்ந்தது -
கொடிய அக்களிறானது முகில்போலக் கதறிச் சீறி நிலத்தில் விழுந்தது;
பாரும் பிண்டது - (அதைப் பொறுக்கலாற்றாது) புவியும் பிளவு பட்டது;
சேடன் சென்னியும் பிளந்தது - அனந்தனடைய ஆயிர முடிகளும் பிளந்தன;
அண்டம் விண்டது போலும் என்ன - அண்டம் வெடித்தது போலு மென்று,
துண்ணென வெருவிப்போன - துணுக்குற்று அஞ்சி யோடிய, திசைமால்
யானை - பெரிய திசையானைகள். பண்டைய தருக்கும் வீறும் படைத்தன -
பழைய செருக்கையும் இறுமாப்பையும் பெற்றன.

     பிளந்தது : சாதி யொறுமை. திசை யானைகள் வெருவிப்போயின,
பின்பு இவ்வேழம் வீழ்ந்தமைகண்டு தருக்கும் வீறும் படைத்தன என
விரிக்க; போன என்பதைப் பெயரெச்சமாக்கி, போகிய தருக்கும் வீறும்
என்னலுமாம். (31)

புதைபடக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால்
உதைபடக் கிடந்த கூற்ற மொத்தது மத்த யானை
சுதைபடு மதிக்கோ வேந்தன் றொழுகுலச் சிறுவ னொத்தான்
பதைபடு மமணர் கால படரெனப் படரிற் பட்டார்.

     (இ - ள்.) மத்த யானை - (அங்ஙனம் வீழ்ந்த) மத மயக்கத்தை
யுடைய யானையானது, புதைபடக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி
தாளால் உதைபடக் கிடந்த கூற்றம் ஒத்தது - (உடல்) மறைய
யானைத்தோலைப் போர்த்தருளிய அறவடிவினனாகிய இறைவன் திருவடியால்
உதை படுதலாற் கீழே வீழ்ந்து கிடந்த கூற்றுவனை ஒத்தது; சுதைபடு மதிக்
கோவேந்தன் - அமிழ்தம் பொருந்திய திங்களின் மரபில் வந்த மன்னனாகிய
விக்கிரம பாண்டியன், தொழுகுலச் சிறுவன் ஒத்தான் - சிவ பெருமானை
அடைக்கலம் புக்க அழகிய அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டனை
ஒத்தான்; பதைபடும் அமணர் காலபடர் எனப் படரில் பட்டார் - (யானை
இறந்தது கண்டு) பதைக்கின்ற சமணர்கள் எமபடரைப் போலத்
துன்பத்திலழுந்தினார்கள்.

     யானையை உரித்ததும் கூற்றினை உதைத்ததும் போல்வன வெல்லாம்
இறைவனுடைய அருட் செயல்களென்பது தோன்ற ‘புண்ணிய மூர்த்தி’
என்றார்.கோவேந்தன் - பேரரசன்; "கோவேந்தன் றேவி" எனச்
சிலப்பதிகாரத்துள் வருதல் காண்க. தொழுகுலச் சிறுவன் - தொழுகின்ற
அழகிய சிறுவன், அந்தணச் சிறுவன். படர் - கிங்கரர். துன்பம். (32)

இருள்கிடந் தனைய தானை யிட்டசிந் துரங்கார் மாலை
இருண்முகத் தொதுங்கிச் செல்லுமிரவிசெங் கிரணம் போன்ற
திருண்முழு துண்ணக் காலை யெழுகதிர் வட்ட மன்ன
திருளினை மறைத்த கண்ட னெய்தவாய் பெய்யுஞ்* செந்நீர்.

     (இ - ள்.) ஆனை இருள் கிடந்தது அனையது - (இறந்து கிடந்த)
யானையானது இருள் கிடந்தாலொத்தது; இட்ட சிந்துரம் - அதன்


     (பா - ம்.) * வாய்ப் பெய்யும்.