II


யானையெய்த படலம்57



கழுதுகள் பூதம் மொய்த்த - பருந்துகளும் பேய்களும் பூதங்களும்
(தசையை உண்ணுதற்பொருட்டு) மொய்த்தன; திருமணித்தடம் தோள்
வீங்க - வீர மகள் வசிக்கும் அழகிய பெரிய தோள்கள் வளருமாறு,
தென்னவன் உவகை பூத்தான் - பாண்டியன் மகிழ் கூர்ந்தான்.

     கணையால் ஏறுண்ட யானைக்கு உருமு வீழ்ந்த குன்றை
உவமை கூறினார். உம்பல் - யானை. உம்பல்மா, இருபெயரொட்டு.
திரு - வீரலக்குமி. (35)

ஆனையின் புண்ணீ ருண்ண வடுத்தகா ருடற்பே யென்னச்
சேனைபின் செல்லப் போந்த திணியிரு ளமணர் தம்மை
மீனவன் கண்டு சீற வேந்தவன் குறிப்பி னிற்கும்
மானவெஞ் சிவவேன் மள்ளர்* வல்லைபோய் முடுக்கலுற்றார்.

     (இ - ள்.) ஆனையின் புண்ணீர் உண்ண அடுத்த கார் உடல்பேய்
என்ன - யானையினது குருதியைப் பருகுதற்கு வந்த கரிய உடலையுடைய
பேய்கள் போல, சேனை பின் செல்லப் போந்த - சோழனது சேனை
பின்னே வர வந்த, திணி இருள் அமணர் தம்மை - செறிந்த இருள்
போன்ற அமணரை, மீனவன் கண்டு சீற - பாண்டியன் கண்டு வெகுள,
வேந்து அவன் குறிப்பில் நிற்கும் - மன்னனாகிய அவன் குறிப்பின்படி
ஒழுகும், மான வெஞ்சின வேல் மள்ளர் - மானத்தையும் கொடிய
சினத்தையு முடைய வேற்படை ஏந்திய வீரர்கள், வல்லை போய்
முடுக்கலுற்றார் - விரைந்து சென்று துரத்தத்தொடங்கினார்கள்.

     புண்ணீர் - குருதி. பேயென்னப் போந்த அமணரென்க.
வேந்தவன் - அவ்வேந்தன். (36)

எடுத்தனர் கையிற் றண்ட மெறிந்தனர் மறிந்து சூழ்போய்த்
தடுத்தனர் கரகந் தூளாத் தகர்த்தனர் பீலி யோடுந்
தொடுத்தன ருடுத்த பாயைத் துணிபடக் கிழத்துக் கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை.

     (இ - ள்.) கையில் தண்டம் எடுத்தனர் சில்லோர் தம்மை எறிந்தனர்
- கையிலே தண்டத்தை எடுத்துச் சிலரை அடித்தனர்; மறிந்து சூழ்போய்த்
தடுத்தனர் கரகம் தூளாத் தகர்த்தனர் - (சிலரைக்) குறுக்காக வளைந்து
தடுத்து அவர் கமண்டலத்தைத் தூளாக உடைத்தனர்; தொடுத்தனர் உடுத்த
பாயை பீலியோடும் துணிபடக் கிழித்து - (சிலர்) தொடுத்து உடுத்திய பாயை
மயிற்றோகையோடும் துண்டாகக் கிழித்து, கால்வாய் விடுத்தனர் -
காற்றின்கண்ணே பறக்கவிட்டனர்; மானம் போக்கி விட்டனர் - (சிலரை)
மானத்தைப் போக்கி ஓட்டினர்.

     சில்லோர் தம்மை என்பதைத் தனித்தனி கூட்டுக. எடுத்தனர்,
தடுத்தனர், கொடுத்தனர் என்பன முற்றெச்சங்கள்; விடுத்தனர்
என்பதனையும்


     (பா - ம்.) * மன்னர்.