என்பது
சிவஞானசித்தியார். கண்ணுவர் முதலிய முனிவர்கள் வேண்டிய
காலையில் அவர்கள் தெளியுமாறு வேதங்கட்குப் பொருள் கூறிய
அந்தணனாகிய சிவபெருமான் என்க. (39)
பின்னுஞ்சில்
வரங்க ணல்கப் பெற்றுநான் மாடக் கூடல்
மன்னுஞ்சின் மயனை வந்து வந்தித்து வருநாட் காமன்
என்னுஞ்சின் மலர்ப்பூந் தண்டா ரிராசசே கரனைப் பெற்று
மின்னுஞ்சில் லியந்தேர் வேந்தன் மேதினி புரக்கு மன்னோ. |
(இ
- ள்.) பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று - மீண்டும் சில
வரங்கள் அருளப்பெற்று, நான்மாடக் கூடல் மன்னும் சின்மயனை வந்து
வந்தித்து வருநாள் - நான்மாடக் கூடலில் வீற்றிருந்தருளும் ஞான
வடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளைக் காலந்தோறும் வந்து வழிபட்டு
வருநாளில், காமன் என்னும் - மன்மதன் என்று சொல்லப்படும், சில்
மலர்ப் பூந்தண்தார் இராசசேகரனைப் பெற்று - மெல்லிய மலர்களாலாகிய
பொலிவுள்ள தண்ணிய மாலையை யணிந்த இராச சேகரன் என்னும்
புதல்வனைப் பெற்று, மின்னும் சில்லி அம் தேர் வேந்தன் மேதினி புரந்து
வந்தான் - விளங்கா நின்ற உருள்பூண்ட அழகிய தேரினையுடைய
விக்கிரமபாண்டியன் புவியினைப் பாதுகாத்துவந்தான்.
அழகிற்
காமனென்று சொல்லப்படும் இராச சேகரன் என்க. சின்மை
ஈண்டு மென்மையை உணர்த்திற்று. சில்லி - உருள். மன், ஒ :
அசைகள். (40)
வம்புளாய்
மலர்ந்த வாரான் வரவிடு மத்தக் குன்றிற்
சிம்புளாய் வடிவங் கொண்ட சேவக னேவல் செய்த
அம்புளாய்த் தூணம் விள்ள வன்றவ தரித்த வாபோற்
செம்புளாய் கொடிய* நார சிங்கமா யிருந்த தன்றே. |
(இ
- ள்.) வம்பு உள்ளாய் மலர்ந்த ஆரான் - மணத்தைத்
தனதகத்துக்கொண்டதாய் மலர்ந்த ஆத்தி மாலையை யணிந்த சோழன்,
வரவிடும் மத்தக் குன்றில் - வரவிட்ட மத யானையின் மேல், சிம்புளாய்
வடிவம் கொண்ட சேவகன் ஏவல் செய்த அம்பு - சிம்புட் பறவையாகத்
திருவுருக்கொண் டருளிய சோமசுந்தரக் கடவுள் ஏவிய அம்பு, உள்ளாய்
தூணம் விள்ள அன்று அவதரித்த வாபோல் - தூணின் அகத்ததாகி
அத்தூண் பிளவுபட அதினின்றம் அப்பொழுது தோன்றிய வாறுபோல,
செம்புள் ஆய் கொடிய நாரசிங்கமாய் இருந்தது - பெரிய திருவடியாகிய
கலுழன் தியானிக்கின்ற உக்கிர நரசிங்கமாய் வெளிப்பட்டிருந்தது.
மத்தக்
குன்று - மதமலை; யானை, மத்தம் - மதக்களி. சிம்புள் -
எண்காற் புள்; இது வருடை யெனவும் சரபமெனவும் கூறப்படும்.
(பா
- ம்.) * செம்புளாய்க் கொடிய.
|