II


விருத்தகுமார பாலரான படலம்67



இனி மறுப்பது என் - (முன்னரே தத்தஞ் செய்தமையால்) இனி மறுப்பது
எவ்வாறு, கொடுப்பது என்று இசைந்தார் - கொடுக்க வேண்டுவதே யென்று
உடன்பட்டனர்.

     மற்று, ஆல் : அசைகள் : குடி முதலியவற்றில் உம்மை விரித்துரைக்க.
அறிந்து - அவனையடைந்து உசாவி யறிந்து. தந்திரம் - பாஞ்சாரத்திரம்,
வைகானசம் என்னும் வைணவ ஆகமங்கள். ஒன்றே - கொடுப்பதே என
ஏகாரங்கள் விரித்துக் கொள்க. கொடுப்பது - கொடுக்கவேண்டுவது. (11)

தாயு மொக்கலு மொத்தபின் றாதையும் வேதத்
தாயு மெண்மணத் தாதியா மறநிலை யாற்றால்
தேயு நுண்ணிடைக் கன்னியைச் செம்பொனாற் புதைத்துக்
காயு மாரழன் முன்னரக் காளைகைக் கொடுத்தான்.

     (இ - ள்.) தாயும் ஒக்கலும் ஒத்தபின் - இங்ஙனம் தாயும் சுற்றத்தாரும்
இசைந்தபின், தாதையும் - தந்தையும், வேதத்து ஆயும் எண் மணத்து -
வேதத்தில் ஆராயப்பட்ட எண்வகை மணங்களுள், ஆதியாம் அறநிலை
ஆற்றால் - முதற்கண் உள்ளதாகிய பிரம மண நெறியால், தேயும்நுண்
இடைக் கன்னியைச் செம்பொனால் புதைத்து - மெலிகின்ற நுண்ணிய
இடையையுடைய கௌரியைச் சிவந்த பொன்னாலாகிய அணிகளால் உடல்
மறைய அலங்கரித்து, காயும் ஆர் அழல் முன்னர் அக் காளையைக்
கொடுத்தான் - சுடுகின்ற நிறைந்த ஓமத்தீயின்முன் அக்காளைப்
பருவத்தையுடைய பிரமசாரியின் கையிற் கொடுத்தான்.

     எண்மணம் : பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம்,
அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன; இவற்றை,

"மறையோர் தேஎத்து மன்ற லெட்டு"

என்று தொல்காப்பியமும்,

"அநத்ண ரருமறை மன்ற லெட்டு"

என்று இறையனாராகப்பொருளும் கூறும். முதற்கண் உள்ள பிரமம் தமிழில்
அறநிலை எனப்படும். பிரமமாவது பிரமசரியங் காத்தானுக்குக் கன்னியைத் தீ
முன்னர்க் கொடுப்பது, பொன் : அணிக்கு ஆகுபெயர். மிக அணிந்து
என்பார் ‘புதைத்து’ என்றார். (12)

தெய்வ மங்கல வரிசைகள் செய்துதான் பயந்த
மௌவ லங்குழற் கன்னியை மணமக னோடுங்
கௌவை யம்புனல் வேலிசூழ் கடிநகர் விடுத்தான்
சைவ மங்கல வேதியத் தாபத னிப்பால்.

     (இ - ள்.) சைவ மங்கல வேதியத் தாபதன் - நன்மை பொருந்திய
சைவ தவ வொழுக்கத்தையுடைய மறையோனாகிய விரூபாக்கன், தெய்வ