II


68திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



மங்கல வரிசைகள் செய்து - தெய்வத் தன்மை பொருந்திய மங்கல
வரிசைகள் பலவற்றைச் செய்து, தான் பயந்த மௌவல் அம் குழல்
கன்னியை - தான் பெற்ற முல்லைமலர்மாலை சூடிய அழகிய
கூந்தலையுடைய கன்னியை, மணமகனோடும் - மணவாளனோடும்,
கௌவை அம்புனல் வேலி சூழ் கடிநகர் விடுத்தான் - ஒலிக்கின்ற நீர்
வேலியாகச் சூழ்ந்த காவலையுடைய நகரின்கண் செல்ல விடுத்தான்;
இப்பால் - பின்.

     மங்கல வரிசை - சுப சீதனம். முல்லை கற்பிற்குரியது. கௌவையும்,
அம் : சாரியை. புனல் வேலி - நீர்வளமுடைய கழனியாகிய வேலியுமாம்.
நகர் விடுத்தான் - நகரிற் செல்லவிடுத்தான். மங்கல சைவத்தாபத வேதியன்
என மாறுக. இப்பால் - பின்பு என்றபடி; இதனைப் பின் நிகழும்
சரிதத்தோடு இயைக்க. (13)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டா லெனப்பல்லா 
                          ரில்லந் தோறுஞ்
செல்லாநின் றிரந்துண்டு திரிந்தமகன் மணமகனாய்ச் 
                          செல்வ நல்க
வல்லாளை மணந்துவரு வான்போற்றம் மனைபுகுத
                          வன்பட் சீலப்
பொல்லாராய் வைணவத்துப் புக்கொழுகு தாய்தந்தை 
                          பொறார்க ளாகி.

     (இ - ள்.) இல்ார்க்குக் கிழியீடு நேர்ப்பட்டாலென - வறியார்க்குப்
பொன் முடிப்புக் கிடைத்தாற்போல, பல்லார் இல்லந்தோறும் செல்லாநின்று
இரந்து உண்டு திரிந்த மகன் - பலருடைய மனைதோறும சென்று ஏற்றுண்டு
திரிந்த மகன், மணமகனாய் - மணமகனாக, செல்வம் நல்க வல்லாளை
மணந்து வருவான்போல் தம் மனைபுகுத - செல்வத்தை அளிக்கவல்ல
திருமகளை மணஞ் செய்து வருவான்போல வந்து தமது இல்லத்தையுடைய,
வன்கண் சீலப் பொல்லாராய் - கொடுமையையே சீலமாகக்கொண்ட
பொல்லாதவராய், வைணவத்துப் புக்கு ஒழுகு தாய் தந்தை பொறார்களாகி -
வைணவ மதத்தை மேற்கொண்டு ஒழுகுகின்ற தாயும் தந்தையும் மனம்
பொறாதவர்களாகி.

     கிழியீடு - கிழியில் இடப்பட்டது; பொன் முடிப்பு. நேர்படுதல் - தானே
எதிர்ப்படுதல். நேர்பட்டால் அவர் களிப்பதுபோற் களிப்புற்று என்க.
திருமகளை மணந்து வருவாள்போற் கௌரியை மணந்து வந்து புகவென
விரிக்க. (14)

வந்தமண வாட்டிசிவ சிந்தனையுஞ் சைவதவ 
                       வடிவு நோக்கி
வெந்தவுடல் போன்மனமும் வெந்தவளை வேறொதுக்கி 
                       வேண்டா ராகி