கன்னமுரங்
கரஞ்சிரந்தோள் கண்டமுங்கண் டிகைபூண்டு
கையிற்
றம்போற்
பன்னெடுநாட் பழகியதோர் தனிப்பெரிய புத்தகமும்
பக்கஞ்
சேர்த்தி. |
(இ
- ள்.) என்ன இருந்து அலமருவாள் - என்று கருதியிருந்து
மனஞ் சுழலுவாள்; இருக்குமிடத்து - (இங்ஙனமாகக் கௌரி வருந்தி)
இருக்கு மிடத்தில், அவள் உள்ளத்து எண்ணியாங்கே - அவள் மனத்திற்
கருதியவாறே, தென்னவனாய் இருந்து அரசு செய்த பிரான் - சுந்தர
பாண்டியனாய் வீற்றிருந்து ஆட்சி புந்த சோமசுந்தரக்கடவுள், அவட்கு
அருளும் செவ்வி நோக்கி - அவளுக்கு அருள் புரியும் பருவத்தை
நோக்கி, கன்னம் உரம் கரம் சிரம் தோள் கண்டமும் கண்டிகை பூண்டு -
காதுகளிலும் மார்பிலும் கைகளிலும் சென்னியிலும் தோள்களிலும்
கழுத்திலும் உருத்திராக்கம் அணிந்து, தம்போல் பல் நெடுநாள் பழகியது
ஓர் தனிப்பெரிய புத்தகமும் - தம்மைப்போலப் பன்னெடுங்காலம்
பழகியதாகிய ஓர் ஒப்பற்ற பெரிய புத்தகத்தையும், பக்கம் கையில் சேர்த்தி
- பக்கத்தே கையில் வைத்துக்கொண்டு.
மேற்செய்யுளிற்
கூறியதைச் சுட்டி என்ன என்றார். உண்மாசு
கழுவுவது சிவனடியார்க்கு என்னுஞ் செய்யுட்களிலுள்ள கவலை
கூர்வாள், தளர்வாள் என்பவற்றை எச்சமாக்கி, இச்செய்யுளில்
அலமருவாள் என்பததைப் பெயராக்கலுமாம். எண்ணியாங்கே அருளுஞ்
செவ்வி நோக்கி யென்க; கன்னம் முதலியவற்றில் எண்ணும்மை விரித்துக்
கொள்க. தம்மைப்போல அனாதியாக விருந்து தம்முடன் பயின்றதாகிய
புத்தகம் என்க; இப்பொழுது கொண்ட முதுமைக் கோலத்தைக் கருதி,
தம்மைப்போல் நெடுநாட் பழகியதாகத் தோற்றும் புத்தகம் எனக் கூறினார்
எனலுமாம். பக்கத்திலே கையில் வைத்துக் கொண்டு என்க. (19)
கரிந்தநீள்
கயன்முள்ளி னரையுமுது திரைகவுளுங்
களைக்கு
நெஞ்சுஞ்
சரிந்தகோ வணவுடையுந் தலைப்பனிப்பு முத்தரியந்
தாங்கு
தோளும்
புரிந்தநூல் கிடந்தலையும் புண்யிணநீ றணிமார்பும்
பாலிய
நீழல்
விரிந்ததோர் தனிக்குடையுந் தண்டூன்றிக் கவிழ்ந்தசையு
மெய்யுந்
தாங்கி. |
(இ
- ள்.) கரிந்த நீள்கயல் முள்ளின் நரையும் - கரிய நீண்ட கயல்
மீனின் முள்ளைப் போன்ற நரையும், முதுதிரைகவுளும் - மிகவுந் திரைந்த
கபோலமும், கனைக்கும் நெஞ்சும் - அடிக்கடி கனைக்கின்ற மார்பும்,
சரிந்த கோவண உடையும் - ஒரு புறம் சரிந்துள்ள கோவணம் போக்கிய
ஆடையும், தலைப்பனிப்பும் - தலை நடுக்கமும், உத்தரியம் தாங்கு தோளும்
- மேலாடை தாங்கிய தோளும், புரிந்த நூல் கிடந்து அலையும் புண்ணிய
|