II


விருத்தகுமார பாலரான படலம்73



நீறு அணி மார்பும் - (முப்புரியாகச்) செய்த பூணூல் கிடந்து அசையும்
புண்ணிய வடிவாகிய திருநிற்றினை அணிந்த மார்பும், நீழல் பொலிய
விரிந்தது ஓர் தனிக்குடையும் - நிழல் விளங்க விரிந்ததாகிய ஓர் ஒப்பற்ற
குடையும், தண்டு ஊன்றிக் கவிழ்ந்து அசையும் மெய்யும் - தண்டினை
ஊன்றி அதனோடு கவிழ்ந்தசைகின்ற திருமேனியும், தாங்கி - ஆகிய
இவைகளைக் கொண்டருளி.

     கரிந்த நீள்கயல் - புறத்தே கருநிறமுடைய நீண்ட கயல். முள்ளின்,
இன் ஒப்புப்பொருட்டு. திரைகவுள் : வினைத்தொகை. கனைத்தல் - இருமல்.
நரை முததலியவற்றைப் பொலிய என்பதனோடு முடித்து, கடையும் மெய்யும்
தாங்கி என்றுரைத்தலுமாம். (20)

ஒருத்தரா யுண்டிபல பகல்கழிந்த பசியினர்போ
                                 லுயங்கி வாடி
விருத்தவே தியராய்வந் தகம்புகுதக் கண்டெழுந்து
                                  மீதூ ரன்பின்
கருத்தளாய்த் தவிசிருத்திக் கைதொழுது சிவனையிங்குக்
                                 காண வென்ன
வருத்தமா தவமுடையே னெனமுனிவர் பசித்துன்பால்
                               வந்தே மென்றார்.

     (இ - ள்.) விருத்த வேதியராய் - மூப்பினையுடைய மறையவராய்,
ஒருத்தராய் - தனியராய், பல பகல் உண்டி கழிந்த பசியினர்போல் -
பலநாட்கள் உணவு இன்மையால் நேர்ந்த பசியினை யுடையார்போல,
உயங்கி வாடி வந்து அகம்புகுத - வருந்தி வாட்டமுற்று வந்து இல்லில்
நுழையாநிற்க, கண்டு எழுந்து மீதூர் அன்பின் கருத்தளாய் - (அதனைப்)
பார்த்து எழுந்து மேலோங்கும் அன்பினையுடைய எண்ணமுடையவளாய்,
தவிசு இருத்திக் கைதொழுது - அவரை ஆசனத்தில் அமர்த்திக் கைகூப்பி
வணங்கி நின்று, சிவனை இங்கு காண - சிவபெருமானை இங்குத் தரிசிக்க,
என்னவருத்தம் மாதவம் உடையேன் என - என்ன வருந்திச் செய்த பெரிய
தவத்தினை உடையேன் என்று சொல்ல, முனிவர் உன்பால் பசித்து வந்தேம்
என்றார் - முனிவர் உன்னிடத்திற் பசியுற்று வந்தேம் என்று கூறியருளினார்.

     ஒருத்தராய் - வேறு துணை யில்லாதவராய் கழிந்த என்னும்
பெயரெச்சம் காரணப்பொருட். சிவனை, முன்னிலையிற் படர்க்கை வந்தது.
சிவனடியாரைச் சிவன் என்று கூறுதல் மரபு; தேவரீர் என்பது போல;
வைணவர்கள் பெருமாள் என்று கூறுதலுங் காண்க. உண்மையுந் தோன்ற இங்கே ‘சிவனை’ எனக் கூறினார். என்ன தவம் என்க. (21)

இற்பூட்டிப் போயினா ரெமரங்க ளெனக்கௌரி
                              யியம்ப மேரு
விற்பூட்டிப் புரம்பொடித்த வேதியாநின் கைதொட்டு
                              விடுமுன் யாத்த