தெளித்து அங்ஙனம்
தெளித்தலாற் கழுவி என்க. இருட் பாச மையல் மாசு
எனக் கூட்டி, ஆணவமாகிய மயக்கத்தைச் செய்யும் அழுக்கினை
என்றுரைத்தலுமாம். (23)
நகைமலரிட்
டருச்சித்து நல்லபரி கலந்திருத்தி
நறுவீ
முல்லை
முகையனைய பாலடிசில் வெள்ளிமலை யெனப்பருப்பு
  முதுகிற்
செம்பொற்
சிகரமெனப் பல்வேறு கருனைபுறந் தழீஇக் கிடந்த
சிறுகுன்
றீட்ட
வகையெனநெய் யருவியெனப் படைத்தனைய சிற்றுண்டி
  வகையும்
பெய்து. |
 (இ
- ள்.) நகை மலர் இட்டு அருச்சித்து - விளக்கமாகிய மலர்களால்
அருச்சித்து, நல்ல பரிகலம் திருத்தி - நல்ல உண்கலத்தைத்திருத்தி வைத்து,
நறுவீ முல்லை முகைஅனைய பால் அடிசில் வெள்ளி மலை என -
நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையின் அரும்பு போன்ற பால்
வார்த்துச் சமைத்த சோற்றை வெள்ளிமலை போலவும், பருப்பு முதுகில்
செம்பொன் சிகரம் என - பருப்பினை அம்மலையின் முதுகில் உள்ள சிவந்த
பொன்னாலாகிய முடிபோலவும், பல்வேறு கருனை - பலவேறு
பொரிக்கறிகளை, புறம் தழீஇக் கிடந்த ஈட்டம் சிறு குன்றின் வகை என -
அம்மலையின் புறத்திற் சூழ்ந்து கிடந்த கூட்டமாகிய சிறு மலைகளின் வபை
போலவும், நெய் அருவி எனப் படைத்து - நெய்யினை (அம்மலையில்
ஒழுகும்) அருவி போலவும் படைத்து, சிற்றுண்டி வகையும் அனைய பெய்து
- வேறு வேறு சிற்றுண்டிகளையும் அங்ஙனமே படைத்து.
 பரிகலம்
- உண்கலம், திருத்தி - தூய்மையுற வைத்து, நறுவீ,
முல்லைக்கு அடை. பாலடிசில் - வெள்ளிய அடிசிலுமாம். அடிசிலின்
மேலிட்ட பருப்பு வெள்ளி மலையின் பொன் முடிபோலவும், அடிசிலைச்
சூழவிட்ட கருனைகள் வெள்ளி மலையைச் சூழ்ந்து கிடந்த குன்றுகள்
போலவும், அடிசிலின்மேலிருந்து ஒழுகம் நெய் வெள்ளி மலையின்
முடியிலிருந்து ஒழுகும் அருவி போலவும் இருக்குமாறு என்க; வடிவும்
நிறமும் பற்றி உவமைகள் கூறினார். (24)
செய்யவா
யிடையிடையே முகமனுரை யின்னமுது
  செவியி
லூட்டத்
தையலாள் வளைக்கையறு சுவையமுது வாயூட்டத்
  தளர்ந்த
யாக்கை
ஐயர்தாந் திருவமுது செய்தமுதுண் டவரெனமூப்
  பகன்று
பூவிற்
கையதே மலர்வாளிக் காளைவடி வாயிருந்தார்
  கன்னி
காண. |
|