II


விருத்தகுமார பாலரான படலம்77



ஆனபொழு தருங்கடிநன் மணங்குறித்து மனையிற்றீர்ந்
                                   தயலூர் புக்க
தேனொழுகு துழாயலங்கற் நீர்த்தனுக்கன் புடையார்போற்
                                   றிரியும் வஞ்ச
மானமுடை யார்மீண்டு மனைபுகலும் பதினாறு
                                   வயதின் மேய
பானன்மணி கண்டனுதற் காப்பணிந்தோர் பசுங்குழவிப்
                              படிவங் கொண்டான்.

     (இ - ள்.) ஆனபொழுது அருங்கடி நல்மணம் குறித்து - அப்பொழுது
அரிய விளக்கத்தையுடைய நல்ல மணத்தினைக் கருதி, மனையில் தீர்ந்து
அயல் ஊர் புக்க - மனையை நீங்கி வேற்றூர் சென்ற, தேன் ஒழுகு துழாய்
அலங்கல் தீர்த்தனுக்கு அன்பு உடையார்போல் திரியும் - தேன் வழியும்
துழாய் மாலையை யணிந்த திருமாலுக்கு அன்பு உடையார்போல் (நடித்துத்)
திரிகின்ற, வஞ்சம் மானம் உடையார் - தீய மானமுடைய மாமி முதலியோர்,
மீண்டு மனை புகலும் - திரும்பி வந்து இல்லிற் புக, பதினாறு வயதில் மேய
பானல்மணிகண்டன் - பதினாறு வயதுடன் பொருந்தியிருந்த நீலோற்பல
மலர்போன்ற அழகிய மிடற்றினையுடைய இறைவன், நுதல் காப்பு அணிந்து
ஓர் பசுங்குழவிப் படிவம் கொண்டான் - நெற்றியிலே காப்பினை அணிந்து
ஒரு பச்சைக் குழவியின் வடிவத்தைக் கொண்டருளினான்.

     புக்க மானமுடையார், திரியும் மானமுடையார் எனத் தனித்தனி
கூட்டுக. தீர்த்தன் - தூயன். திருமாலிடத்தும் உண்மை யன்புடையரல்ல
ரென்பார் ‘அன்புடையார்போல் திரியும்’ என்றார். வஞ்ச மானம் - தீய
அபிமானம்; வஞ்சமும் மானமும் என்றுமாம். பானல் - குவளை. பானலும்
நீலமணியும் போலும் கண்டம் என்றுமாம். காப்பு - திருநீறு; பொட்டுமாம்.
பசுமை - இளமை மேற்று. (27)

எழுதரிய மறைச்சிலம்பு கிடந்துபுறத் தலம்பவன்ப
                                 ரிதய மென்னுஞ்
செழுமலரோ டையின் மலர்ந்து சிவானந்தத் தேன்றதும்பு
                                தெய்வக் கஞ்சத்
தொழுதகுசிற் றடிப்பெரிய விரல்சுவைத்து மைக்கணீர்
                               துளும்ப வாய்விட்
டழுதணையா டையிற்கிடந்தா னனைத்துயிரு மீன்றுகாத்
                                தழிக்கு மப்பன்.

     (இ - ள்.) அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன் -
எல்லா உயிர்களையும் படைத்துக் காத்துத் துடைத்தருளும் ஐயன் எழுதரிய
மறைச்சிலம்பு கிடந்து புறத்து அலம்ப - எழுதற்கரிய வேதமாகிய சிலம்புகள்
புறத்திற் சூழ்ந்து கிடந்து ஒலிக்க, அன்பர் இதயம் என்னும் செழுமலர்