ஓடையில் மலர்ந்து
- அன்பர்களின் நெஞ்சமாகிய செழிய மலரோடையில்
மலர்ந்து, சிவானந்தத்தேன் ததும்பு - சிவானந்தமாகிய தேன் ததும்பி வழியும்,
தெய்வக்கஞ்சம் தொழுதகு சிற்றடி - தெய்வத்தன்மை பொருந்திய தாமரை
மலர்போன்ற யாவராலும் வணங்கத் தக்க சிறிய திருவடியின், பெரிய விரல்
சுவைத்தது - பெருவிரலை வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டு, மைக்கண்
நீர் துளும்ப வாய்விட்டு அழுது அணை ஆடையில் கிடந்தான் - மைதீட்டிய
கண்களில் நீர் ததும்ப வாயினைத் திறந்து அமுது அணையாக விரித்த
ஆடையிலே கிடந்தருளினான்.
வேதங்கள்
புறத்தே ஒலித்துக் கொண்டிருக்க அன்பர்களின் அகத்தில்
விளங்குகின்ற திருவடி என்னும் நயமும் தோன்றுமாறு காண்க. தாமரை
போலும் அடியென்னும் உவமை இதய ஓடையில் மலர்ந்து சிவானந்தத்தேன்
ததும்பும் என்னும் உருவகங்களை அங்கமாகக் கொண்டு வந்தது.
காற்பெருவிரல் சுவைத்தல் குழவி யியல்பு. எவ்வுயிர்க்கும் அப்பனாகியவன்
தானொரு குழவியாய்க் கிடந்தான் என அவனது திருவிளையாட்டை வியந்து
கூறியவாறு. (28)
தாய்விட்டுப்
போனதொரு தனிக்குழவி யெனக்கலங்கித்
தாங்கித்
தேடி
ஆய்விட்டுப் பிரமனழ மறைகளழ வன்புடையா
ளன்பிற்
பட்டு
வாய்விட்டுக் கிடந்தழுத மகவினைக்கண் டணங்கனையாண்
மாமி
யென்னுங்
காய்விட்டு மதக்கொடியா ளிம்மகவே தெனக்கோட்டாள்
கௌரி
தன்னை. |
(இ
- ள்.) தாய் விட்டுப் போனது ஒரு தனிக் குழவி எனக் கலங்கி
- தாய் கைவிட்டுப் போகப்பட்டதாகிய ஓர் ஒப்பற்ற குழவியைப் போலக்
கலங்கி, தங்கி ஆய்விட்டு பிரமன் அழ - முடியிற்றாங்கி ஆராய்ந்து தேடிப்
பிரமன் (ஒருபால்) அழவும், மறைகள் அழ - வேதங்கள் (ஒருபால்) அழவும்,
அன்பு உடையாள் அன்பில் பட்டு - அன்புடைய கௌரியின்
அன்பிலகப்பட்டு, வாய்விட்டுக் கிடந்து அழுத மகவினைக் கண்டு - வாயைத்
திறந்து அணையாடையிற் கிடந்தழுகின்ற குழவியைப் பார்த்து, அணங்கு
அனையாள் மாமி என்னும் காய்விட்டு மதக்கொடியாள் - திருமகளை ஒத்த
கௌரியின் மாமி என்கின்ற பெருஞ் சினத்தையுடைய வைணவ
மதக்கொடியவள், கௌரி தன்னை இம்மகவு ஏது எனக் கேட்டாள் -
கௌரியை நோக்கி இக்குழவி ஏது என்று கேட்டாள்.
தாய்தனி
விட்டுப் போனதொரு குழவி என்றுமாம். எவ்வுயிர்க்கும்
தந்தையே யன்றித் தாயுமாகிய இறைவன் தாய் விட்டுப் பிரிந்த குழவிபோல்
அழுதான் என்றும், பிரமன் முதலிய தேவர்களும் மறைகளும் தன்னைத்
தேடிக் காணாது அழாநிற்கத் தான் தாயைக் காணாது அழுவான்போல்
அழுதான் என்றும் இறைவனுடைய அருமையும் எளிமையும் தோன்றக் கூறிய
பொருனயமும் சொன்னயமும் பாராட்டற் குரியன. கலங்கி
|