II


விருத்தகுமார பாலரான படலம்79



வாய்விட்டுக் கிடந்தழுத எனக் கூட்டுக. ஆய்வு இட்டு - ஆராய்தலைப்
பொருந்தி. பிரமன் ஏனைத் தேவர்க்கும் உபலக்கணம். அன்பாகிய
வலியிலகப்பட்டு என்பார் ‘அன்பிற் பட்டு’ என்றார். மாமியென்னும்
கொடியாள், காய்கின்ற கொடியாள் எனக் கூட்டுக. விட்டு விஷ்ணு
என்பதன் சிதைவு. (29)

நத்தனயன் றனக்கரிய நாயகனுக் கன்புடையா
                              ணவில்வா டேவ
தத்தனயந் தருமனைவி யொடுபோந்து சிறுபோது
                                 தைய லாயீண்
டித்தனயன் றனைப்பார்த்துக் கோடியென வைத்தகன்றா
                              ளென்னா முன்னஞ்
சித்தநய னங்கலங்கச் சீறிமண வாட்டிதன்மேற்
                            செற்றங் கொண்டாள்.

     (இ - ள்.) நத்தன் அயன் தனக்கு அரிய நாயகனுக்கு அன்பு
உடையாள் நவில்வாள் - சங்கினை ஏந்திய திருமாலுக்கும் பிரமனுக்கும்
காண்டற்கரிய சிவபெருமானுக்கு அன்புடைய கௌரி கூறுவாள்,
தேவதத்தன் நயம் தரு மனைவியோடு போந்து - தேவதத்தனென்பான்
தனக்கு இன்பந்தரும் மனைவியோடும் வந்து, தையலாய் - பெண்ணே,
இத்தனயன் தனை ஈண்டு சிறுபோது பார்த்துக் கோடி என வைத்து
அகன்றான் - இக்குழவியை இங்குச் சிறிது பொழுது பார்த்துக் கொள்வாயாக
என்று வைத்துச் சென்றான், என்னா முன்னம் - என்று சொல்லு முன்னரே,
சித்தம் நயனம் கலங்கச் சீறி மணவாட்டி தன்மேல் செற்றம் கொண்டாள் -
மனமுங் கண்களுங் கலங்குமாறு சினந்து மருகியாகிய கௌரியின் மேல்
மாறாச் சினங் கொண்டாள்.

     நத்து - சங்கு. நவில்வாள் என்பதனைக் கூறுபவள் எனப் பெயராகக்
கொள்க. யாரோ ஒருவன் என்பதற்குத் தேவதத்தன் என்று கூறும் வடநூல்
வழக்குப்பற்றி ஈண்டுத் தேவதத்தன் என்று கூறிற்றுமாம். கோடி - கொள்ளுதி.
என்றாள் என்னாமுனம் என விரித்துரைக்க. தன் சித்தமும் கண்ணும்
சினத்தாற் கலங்க என்றும், கௌரியின் சித்தமும் கண்ணும் கலங்க என்றும்
இருவகையாகக் கூறுதலும் பொருந்தும். செற்றம் - வைரம்; மாறா வெகுளி.
தன் : அசை. (30)

என்புபூண் டுடிகாட்டிற் பொடியாடு முருத்திரனுக்
                                   கிடைய றாத
அன்புபூண் டான்மகவுக் கன்புடையாய் நீயுமெமக்
                                  காக யென்னாத்
துன்புபூண் டயர்வாளை மகவையுங்கொண் டகத்தைவிடத்
                                  துரத்தி னார்கள்
வன்புபூண் டொழுகுவை ணவம்பூண்டு பொறையிரக்க
                                   மான நீத்தார்.