II


கான்மாறியாடின படலம்85



     (இ - ள்.) பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து
- காவிரி நாட்டையுடைய அக் கரிகாற் சோழனது வாயிலினுள்ள வனாகிய,
ஒரு புலவன் வந்து, அலர் வேம்பின் கன்னிநாடனைக் கண்டு முன் பரவுவான்
- அலர்ந்த வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டி நாடனாகிய இராச
சேகரனைக் கண்டு முன்னின்று துதிக்கின்றவன், தென்னர் ஏறு அனையாய் -
பாண்டியருள் ஆண் சிங்கம் போன்றவனே, கனைகழல் கரிகால்
எம்மன்னவர்க்கு அறுபத்துநால் கலைகளும வரும் - ஒலிக்கின்ற
வீரக்கழலையணிந்த கரிகாலன் என்னும் எம் அரசனுக்கு அறுபத்துநான்கு
கலைகளும் கைவரும்; உனக்கு ஒன்றுவராது - உனக்கு ஒரு கலை வராது;
அது பரத நூல் - அது யாதெனில் பரதநூலாகும்; தெரிந்திலை எனச்
சொன்னான் - ஆதலால் நீ கலைகள் முழுதும் அறிந்திலை என்று
சொன்னான்.

     வாயிலுள்ளான் - அரண்மனைப் புலவன். பரவுவான் : பெயர்.
கரிகாலன். கரிகால் வளவன் என்றிங்ஙனம இவன் பெயர் வழங்கும்.
தீயாற் கரிந்த காலுடைமையால் இப்பெயர் போந்தது;

"சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்"

என்னும் பழமொழி வெண்பாவும்,

"முச்சக்கரமும் . . . கரிகாலன் கானெருப்புற்று"

என்னும் பத்துப் பாட்டைச் சார்ந்துள்ள வெண்பாவும் முதலியவற்றால்
தீயால் கால் கருகினமையறிக. அதனை ஏன் தெரிந்திலையெனச்
சொன்னான் எனினும் பொருந்தும். (5)

கேட்ட மீனவன் மறுபுலவெிஞ்சையன்
     கிளத்துசொல் லிகன்மானம்
மூட்ட வாகுல மூழ்கிய மனத்தனாய்
     முதுமறைச் சிரமன்றுள்
நாட்ட மூன்றுடை நாயக னாடலை
     நானுமா டுதற்குள்ளம்
வேட்ட தேகொலா மிதுவுமெம் பிரானருள்
     விதியென வதுகற்பான்.

     (இ - ள்.) கேட்ட மீனவன் - அதனைக் கேட்ட பாண்டியன், மறு
புல விஞ்சையன் கிளத்து சொல் இகல் மானம் மூட்ட - வேற்றரசன் வாயிற்
புலவன் கூறிய கூற்று பகைமையையும் மானத்தையும் மூள் விக்க, ஆகுலம்
மூழ்கிய மனத்தனாய் - துன்பத்துள் அழுந்திய மனத்தை யுடையவனாய்,
முதுமறைச் சிரம்மன்றுள் - பழமையாகிய வேதமுடியின் வடிவாகிய
மன்றின்கண், நாட்டம் மூன்று உடை நாயகன் ஆடலை - கண்கள்
மூன்றுடைய இறைவன் ஆடியருளும் திருக்கூத்தினை, நானும் ஆடுதற்கு
உள்ளம் வேட்டதே - ஒன்றுக்கும் பற்றாத சிறியனாகிய யானும் ஆடுதற்கு
என் உள்ளம் விரும்பிற்றேயோ, இதுவும் எம்பிரான் அருள் விதி என அது
கற்பான் - இதுவும் எம் இறைவனுடைய அருளாணையே என்று கருதி
அதனைக் கற்பதற்கு.