விஞ்சையன்
- கல்வி வல்லோன்; புலவன். இகல்மானம் - வலிய
மானமும் ஆம். மானம் - தாழ்தற்கு ஒருப்படாமை. மன்றுள் ஆடும்
ஆடலை யென விரிக்க. விரும்பியதனை வியந்து வேட்டதே என்றான்
கொல், ஆம் : அசைகள். விதி - ஆணை, கட்டளை. கற்பான்.
வினையெச்சம். (6)
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
ஆடனூல் வரம்பு
கண்டவ ராகி
யவ்வழி யாடலும் பயின்ற
நாடக நடைதேர் புலவரைத் துருவி
நண்ணிய வவர்க்கெலா மகிழ்ச்சி
வீடருஞ் சிறப்பா லறுவையும் பூணும்
வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
பாடல்வண் டரற்றுந் தாரினான் பரதப்
பனுவலுங் கசடறப் பயில்வான். |
(இ
- ள்.) ஆடல் நூல் வரம்பு கண்டவராகி - நாடக நூலின்
எல்லையைக் கண்டவராய் அவ்வழி ஆடலும் பயின்ற நாடக நடைதேர்
புலவரைத் துருவி - அந்நூலிற் கூறிய வழியே ஆடுதலிலும் பழகிய நாடக
நடையிற் றேர்ச்சி பெற்ற புலவரைத் தேடி, நண்ணிய அவர்க்கு எலாம் -
வந்த அப்புலவரனைவர்க்கும், மகிழ்ச்சி வீடு அருஞ் சிறப்பால் மகிழ்ச்சி
நீங்குதலில்லாத வரிசையினால், அறுவையும் பூணும வெறுக்கையும்
வெறுத்திடக் கொடுத்து - ஆடையும் அணியும் பொன்னுமாகியவற்றை
(அவர்கள்) விருப்பமொழியக் கொடுத்து, பாடல் வண்டு அரற்றும்
தாரினான் - இசைபாடுதலையுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை
யணிந்த பாண்டியன் (அவர்களிடம்,) பரதப் பனுவலும் கசடு அறப்
பயில்வான் - நாடக நூலையும் குற்றமற்க கற்கத் தொடங்கினான்.
நாடக
நடை நாடக வொழுக்கம். துருவி - ஆராய்ந்து அழைத்து.
சிறப்பால் - வரிசையாக. வெறுத்திட - அவாவடங்க; பின்
வேண்டுதலல்லையாக : மிக என்றுமாம்.
"உற்றுழி யுதவியும்
உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" |
என்பவாகலின் வெறுத்திடக்
கொடுத்து என்றார். மீனவனாகிய தாரினான்
என்க. பனுவலும், உம்மை எச்சப்பொருட்டு. (7)
பாவமோ டராகந்
தாளமிம் மூன்றும்
பகர்ந்திடு முறையினாற் பரதம்
ஆவயி னங்க முபாங்கமே பிரத்தி
யாங்கமே யலர்முக ராகம்
|
|