ஏழுபாலையினையும்
இணை நரம்புதொடுத்து நிறுத்த எழுகின்ற நூற்று
மூன்று பண்கள் முதலாயினவாகும்; இனி, பைரவி முதலாகச் சொல்லப்படும்
இராகங்களுமாம்; நரம்பின் அடைவால் உரைக்கப்பட்ட ஆதியிசை
பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்று என்பர். தாளம் -
சச்சபுடம் முதலான பஞ்ச தாளமும், அரை மாத்திரையுடைய ஏக தாளம்
முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாகச் சொன்ன
நாற்பத்தொரு தாளமும், ஆறன் மம்மம் எட்டன் மட்டம் என்பனவும்,
தாளவொரியல் தளிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக
எண்கூத்துப்பாணி இறுதியாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும்,
முதனடை வாரம் முதலாயினவுமாம். அங்கம் முதலாகக் கூறப்படுவன
நிருத்தத்தின் பொருவிலக்கண வகைகள்; இவை வருஞ் செய்யுளிற்
கூறப்படுவனவற்றோடு சேர்ந்து முடியும். (8)
விண்டிடாத்
தேசி சாரியே நியாயம்
விருத்தியே பிரசிவா ரம்பூ
மண்டல முடனா காசமண் டலமே
மாசில்சுத் தக்கர ணஞ்சீர்
கண்டவுற் புலித கரணமே யங்க
காரமே யிரேசித மென்னக்
கொண்டநா லைந்து பேதமுங் கற்றுக்
கோதறப் பயின்றபி னவற்றுள். |
(இ
- ள்.) விண்டிடாத் தேசிசாரியே - நீங்காத தேசிசாரியும், நியாயம்
விருத்தியே பிரவிசாரம் - நியாயமும் விருத்தியும் பிரவிசாரமும். பூ
மண்டலமுடன் ஆகாச மண்டலம் - பூ மண்டலமும ஆகாச மண்டலமும்,
மாசுஇல் சுத்தக் கரணம் - குற்ற மில்லாத சுத்தக் கரணமும், சீர்கண்ட
உற்புலித கரணமும் அங்ககாரமும் இரேசிதமும், என்னக் கொண்ட - என்று சொல்லப்பட்ட,
நாலைந்து பேதமும் கற்றுக் கோதறப் பயின்ற பின் -
இருபது பேதங்களையுங் கற்றுக் குற்றமறப் பழகிய பின்னர், அவற்றுள்
- அவைகளுள்
எண்ணேகாரம் இடையிட்டு வந்தன. (9)
வருத்தமின்
மனோபா வாதியா மெட்டு
வகைநிருத் தங்களிற் சாரி
நிருத்தமா கியதாண் டவமக மார்க்க
நிகழ்த்திடுந் தேசியே வடுகே
அருத்தமா கியசிங் களமென மூன்றா
மதுநிலை யாறுமூ விரண்டு
திருத்தமாம் பதமுந் திகழிரே காதி
செப்பிய வங்கமீ ரெட்டும். |
|