(இ
- ள்.) வருத்தம் இல் மனோபாவ ஆதியாம் எட்டுவகை
நிருத்தங்களில் - வருத்தமில்லாத மனோபாவ முதலிய எண்வகை
நிருத்தங்களில், சாரி நிருத்தமாகிய தாண்டவம் அகமார்க்கம் ஆம் - சாரி
நிருத்தமாகிய தாண்டவம் அகமார்க்க மாகும், நிகழ்த்திடும் தேசியே வடுகே
அருத்தமாகிய சிங்களம் என மூன்றாம் - (இன்னும் அவ்வக மார்க்கம்)
கூறப்படும் தேசியும் வடுகும் பொருளமைந்த சிங்களமும் என மூன்று
வகைப்படும்; அது நிலை ஆறும் - அவ்வக மார்க்கத்திற் குரிய அறுவகை
நிலையும், மூவிரண்டு திருத்தம் ஆம் பதமும் - மூன்றும் இரண்டுஞ் சேர்ந்த
திருத்தமாகிய ஐந்து பதமும், திகழ் இரேகை ஆதி செப்பிய அங்கம்
ஈரெட்டும் - விளங்காநின்ற இரேகை முதலாகச் சொல்லிய அங்கங்கள்
பதினாறும்.
அகக்
கூத்துள்ளே சாந்திக் கூத்தின் வகையாகிய சொக்கம், மெய்.
அவி நயம், நாடகம் என்னும் நான்கனுள் மெய்க்கூத்தானது தேசி, வடுகு,
சிங்களம் என மூவகைப்படும் என்பர். அறுவனை நிலை - வைணவம்,
சமநிலை, வைசாகம, மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என்பன.
மூவிரண்டு என்பதனை மூன்றும் இரண்டும் எனக் கொள்க. பதம் - பாதம்;
ஐவகைப் பாதம் - சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம்
என்பன. அங்கம் - அங்கக் கிரியை; அங்கக் கிரியை பதினாறு - சரிகை,
புரிகை, சமகலி, திரிகை, ஊர்த்துவகலிகை, பிருட்டகம், அர்த்த பிருட்டகம்,
சுவத்திகம், உல்லோலம, குர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம்,
தானபதப்பிராய விருத்தம், உக்ஷே வேட்டனம். அவக்ஷேபணம், நிகுஞ்சனம் என்பன. திகழரேகாதி
என்பதனை, திகழ் சரிகாதி எனப் பாடங்
கொள்ளுதல் பொருத்தம். (10)
நால்வகைத் தாகுங் கரணமு மேலோர்
நாட்டிய விருவகைக் கரமுங்
கால்வகை புரிகை முதற்பதி னாறுங்
கவான்மனை யாதியா மிரண்டும்
பாலது மடிப்பு வகையெழு நான்கும்
பழிப்பறு சுத்தசா ரியெனும்
ஏலுறு பூசா ரிகள்பத னாறு
மித்துணைக் ககனசா ரிகளும். |
(இ
- ள்.) நால் வகைத்து ஆகம் கரணமும் - நான்கு வகைப்
பட்டதாகிய கரணமும், மேலோர் நாட்டிய இருவகைக் கரமும் -
மேலோர் நிலை பெறுத்திய இருவகைக் கைகளும், கால்வகை புரிகை முதல்
பதினாறும் - புரிகை முதலிய காலின் செய்கை பதினாறும், கவான்மனை
ஆதியாம் இரண்டும் - மனை முதலய தொடையின் றொழில் இரண்டும்,
பாலது மடிப்புவகை எழு நான்கும் - பக்கங்களின் தொழிலாகிய மடிப்புவகை
இருபத்தெட்டும், பழிப்பு அறு சுத்தசாரி எனும் ஏல் உறு பூசாரிகள் பதினாறும்
- குற்றமில்லாத சுத்தசாரி என்னப்படும் பொருந்திய பூசாரிகள் பதினாறும்,
இத்துணைக் ககனசாரிகளும் - பதினாறு ககனசாரிகளும்.
|