சொல்லாய்த் தொழிற்பெயராயிற்று.
தேவர்க்குத் தொண்டு செய்து பேரின்ப
வாழ்வெய்துதற்குரிய உயிரென்பார் நல்லுயிர் என்றாரென்க. (13)
என்னலுந்
தென்னர்க் கென்று மெய்திய விடுக்கண் டீர்க்கும்
முன்னவன் முன்போ னான்கு முகிலையு நோக்கி யின்ன
தொன்னக ரெல்லை நான்குஞ் சூழ்ந்துநான் மாட மாகி
வின்னெடு மாரி* யேழும் விலக்குமி னெனவி டுத்தான். |
(இ
- ள்.)
என்னலும் - என்று முறையிட்ட வளவில், தென்னர்க்கு
எய்திய இடுக்கண் என்றும் தீர்க்கும் முன்னவன் - பாண்டியர்களுக்கு
உண்டாகும் துன்பங்களை எப்பொழுதும் போக்கி யருளும் முன்னவனாகிய
சோமசுந்தரக் கடவுள், நான்கு முகிலையும் முன்போல் நோக்கி - நான்கு
முகில்களையும் முன்போலவே பார்த்து, இன்ன தொல்நகர் எல்லை நான்கும்
சூழ்ந்து - இந்தத் தொன்று தொட்டுள்ள மதுரைப் பதியின்
நான்கெல்லையையும் வளைந்து, நான் மாடம் ஆகி - நான்கு மாடங்களாகி,
வில் நெடு மாரி ஏழும் விலக்குமின் என விடுத்தான் - வில்லினையுடைய
நீண்ட ஏழு முகில்களையும் விலக்குங்கள் என்று விடுத்தருளினான்.
வேந்தன்
காத்தல் வேண்டும் என்னலும் என மேலிரண்டு
செய்யுட்களோடு இயைத்து ஒரு தொடராக்குக. சோமசுந்தரக்கடவுள்
இப்பொழுது இத்துன்பத்தைப் போக்குவது புதுமை யன்றென்பார் தென்னர்க்
கென்றும் எய்திய இடுக்கண் தீர்க்கும் முன்னவன் என்றார். முன்போல்
என்றது முந்திய திருவிளையாடலைச் சுட்டிற்று. (14)
வந்துநான்
மாட மாகி வளைந்துநாற் றிசையுஞ் சூழ்ந்து
சந்துவாய் தெரியா தொன்றித் தாமொரு குடிலாய் மாடப்
பந்திகோ புரஞ்செய் குன்றங் கால்கள்போற் பரிப்பப்
போர்த்த
இந்துவார் சடையோ னேய வெழிலிமா நகர மெங்கும். |
(இ
- ள்.) இந்துவார்
சடையோன் ஏய எழிலி - சந்திரனை யணிந்த
நீண்டசடையினையுடைய சோமசுந்தரக் கடவுள் ஏவிய முகில்கள், வந்து நான்
மாடமாகி வளைந்து - வந்து நான் மாடமாய் வளைந்து, நால் திசையும்
சூழ்ந்து சந்துவாய் தெரியாது ஒன்றி - நான்கு திசைகளிலும் க்ஷழ்ந்து
பொருத்துவாய் தோன்றாது ஒன்று பட்டு, தாம் ஒரு குடிலாய் - தாம் ஒரு
குடிசையாகி, மாடப் பந்தி கோபுரம் செய்குன்றம் கால்கள் போல் பரிப்ப -
மாடவரிசைகளும் கோபுரங்களும் கட்டுமலைகளுமாகிய இவைகள்
தூண்களைப்போல நின்று தாங்க, மா நகரம் எங்கும் போர்த்த -
பெருமையுடைய அந்நகர முழுதையும் மறைத்தன.
சந்துவாய்
- கூடுமிடம். தெரியாது - தோன்றாவாறு. பரிப்பக் குடிலாய்ப்
போர்த்த என்க. குடில் என்றது ஈண்டு மேற்கூரையை. மாடப் பந்தி
(பா
- ம்.) * இந்நெடுமாரி.
|